வெளியிட்ட தேதி : 16.11.2021

YouTube now hides dislike count on video

YouTube-ல் இனி 'Dislike' இருக்காது! YouTube தற்போது வீடியோ டிஸ்லைக் பட்டனின் அருகில் இருக்கும் மொத்த‌ டிஸ்லைக் எண்ணங்களை மறைக்கிறது. மற்ற சமூக ஊடக தளங்களைப் போலவே, இணையதளம் முழுவதிலும் உள்ள வீடியோக்களில் டிஸ்லைக் எண்ணிக்கையை (Dislike Counts) அகற்ற YouTube அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது.

YouTube ஒட்டுமொத்தமாக‌ டிஸ்லைக் பொத்தானை அகற்றி விடவில்லை மற்றும் பயனர்கள் இன்னும் டிஸ்லைக் பட்டனை கிளிக்செய்ய‌ இயலும். ஆனால் டிஸ்லைக்குகளின் மொத்த‌ எண்ணிக்கையினை பார்வையாளர்களுக்கு கண்பிக்காது. படைப்பாளி அவருடைய‌ யூடியூப் ஸ்டுடியோ அக்கவுண்ட் உள்ளே நுழைத்து எத்தனை டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதனால் டிஸ்லைக் மூலம் படைப்பாளிகள் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தவிர்க்க‌ YouTube நிறுவனம் புதிய நடவடிக்கையினை எடுத்துள்ளது.

யூடியூப் போன்று Facebook மற்றும் Instagram ஆகிய சமூகவலைத் தளங்களும் மனநலம் மற்றும் துன்புறுத்தல்களை தடுக்க உதவும் பொருட்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் பயனர்களுக்கு hide option-ஐ அறிமுகப்படுத்தியது.

நவம்பர் 10-ஆம் திகதி, TeamYouTube அதன் ட்விட்டர் பக்கத்தில், "குறிவைக்கப்பட்டு Dislike செய்யப்படுவதையும் மற்றும் படைப்பாளிகள் மீதான அவற்றின் தாக்கத்தை குறைக்க (உதாரணமாக சிறிய படைப்பாளிகள்), யூடியூப்பில் இன்று முதல் டிஸ்லைக் எண்ணிக்கை பொதுவாக அனைவரும் பார்க்கும்படி இருக்காது (லைக் பொத்தான் தொடர்ந்து இருக்கும்). பல ஆராய்ச்சி, சோதனை மற்றும் பரிசீலனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.