வெளியிட்ட தேதி : 27.07.2021

How to save 'WhatsApp Status' images and videos from friends

சில‌ தருணங்களில், மற்றவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவானது நமக்கு பிடிக்கின்ற‌ வகையில் அருமையானதாக‌ தென்படும். அண்ட்ராய்டு மொபைல் போனில், மற்றவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை டவுன்லோடு செய்வது எப்படி என்பதை குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் 'ஸ்டேட்டஸ்' எனும் சிறப்பம்சமானது நமது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF-களை ஸ்டேட்டஸாக பகிர அனுமதிக்கிறது. நாம் பகிரும் அந்த ஸ்டேட்டஸை, நமது அனுமதிப்பினை பொறுத்து நம்முடைய கான்டாக்ட் லிஸ்டில் இருப்பவர்கள் மட்டும்லாது, யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

அதேபோல், நாமும் மற்றவர்களது WhatsApp Status-ஐ பார்க்கலாம். ஆனால், நாம் ஸ்டேட்டஸில் பார்க்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்க மட்டுமே வாட்ஸ்அப் நம்மை அனுமதிக்கிறது. நமக்கு அந்த ஸ்டேட்டஸ் வீடியோ அதிகபடியாக‌ பிடிக்கும் பட்சத்தில் அதை நாம் பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால், அதை டவுன்லோடு செய்து பயன்படுத்துவ‌தற்கு வாய்ப்பே இல்லையே என்று கூற‌ முடியாது. அதற்கும் மாற்று வழி உள்ளது. வேறொரு வாட்ஸ்அப் பயனரின் 'ஸ்டேட்டஸையும்' பதிவிறக்கம் செய்யலாம் என்பது பலருக்கும் (சிலருக்கு) தெரியாது. அதற்கான செயல்முறை மிகவும் எளிது.

WhatsApp Status வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி என்பதை இங்கே படிப்படியாக பார்க்கலாம்.

  • செயல் 1: உங்கள் ஸ்மார்ட்போனில் Google Files ஆப் முன்கூட்டியே நிறுவப்பட்டிருக்கும். அப்படி இல்லையென்றால் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் Google Files-ஐ பதிவிறக்கவும்.
  • செயல் 2: அதன் பிறகு அந்த செயலியை திறந்து, அதில் மேல் இடது மூலையில் உள்ள மெனு ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • செயல் 3: Settings ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • செயல் 4: “Show Hidden Files” விருப்பத்திற்கு மாற்று என்பதை இயக்கவும். (toggle button)
  • செயல் 5: உங்கள் ஸ்மார்ட்போனின் File Manager-க்குச் செல்லுங்கள்
  • செயல் 6: அடுத்து Internal Storage > WhatsApp > Media >Status என்பதைக் கிளிக் செய்யவும்
  • செயல் 7: அந்த போல்டரில், நீங்கள் பார்த்த ஸ்டேட்டஸை சரிபார்க்க முடியும். நீங்கள் தேடும் புகைப்படம் / வீடியோவைக் கிளிக் செய்யவும்
  • செயல் 8: நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் ஸ்டேட்டஸ் வீடியோவை நீண்ட நேரம் அழுத்தி அதை நீங்கள் விரும்பிய இடத்தில் சேமிக்கவும்.

இப்போது நீங்கள் விருப்பப்பட்ட‌ WhatsApp Status வீடியோவை பகிரலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.