திருவெம்பாவை பாசுரம் 08 - கோழி சிலம்பச் சிலம்புங்

திருவெம்பாவை பாடல் 08 : மார்கழி 8ம் நாள் திருவெம்பாவை பாடல்

கோழி சிலம்பச் சிலம்புங் : திருவெம்பாவை பாடல் 08

கோழி சிலம்பச் சிலம்புங் : பாசுரம் 08

திருவெம்பாவை பாசுரம் 8 | Thiruvempavai Pasuram

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம்: சிவபெருமான் பெருமையைப் பாடிக்கொண்டு வந்து புறத்தே நிற்கும் பெண்கள், இப்பொழுது, விடியலின் அடையாளங்களைக் கூறத் தொடங்குகிறார்கள். "வீட்டில் வளர்க்கும் கோழிகள் கூவுகின்றன. குருகுகள் (நாரைகள்) உள்ளிட்ட பிற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. மக்களும் விழித்தெழுந்து, திருக்கோயில்களை அடைந்து மங்கலக் கருவியாம் நாகஸ்வரத்தையும் வெண்சங்குகளையும் இசைக்கிறார்கள்.

ஒப்பற்ற பேரொளியே, ஒப்பற்ற பெருங்கருணையே, ஒப்பற்ற விழுப்பொருளே என்றெல்லாம் வாயார இறைவன் பெருமையைப் பாடுகிறோம். எந்த ஓசைக்கும் நீ எழவில்லையென்றால், இதென்ன பேருறக்கமோ புரியவில்லையே! ஊழிக்காலத்தில் முழு முதல்வனாகவும் மாதொருபாதியனாகவும் திகழ்கிற பெருமானை நாங்கள் பாடுகிறோம். ஒருவேளை இவ்வாறு கிடப்பதுதான் இறைவன் மீது நீ வைத்திருக்கும் அன்போ?' என்று வினா எழுப்புகிறார்கள்.

உங்கள் கருத்து : comment