Varaha moorthy
Varaha Moorthy Album Collections : Sri Varaha Gayatri Mantra, Sri Varaha Sahasranama, Sri Varaha Stothram, Sri Varahi Slokas, Devotional Songs lyrics and Varaha mantras in Tamil. வராஹ மூர்த்தி ஸ்லோகம், ஸ்ரீ வராக மூர்த்தி அஷ்டகம், ஆகிய வராக மந்திரங்களை கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
வராஹர் பக்தி பாடல்கள்
வியாழக்கிழமை பக்தி பரவசமூட்டும் வராஹ மூர்த்தி பாடல்கள் தொகுப்பு : ஸ்ரீ வராஹ ஜெயந்தி அன்று கேட்க வேண்டிய பெருமாள் பாடல்கள். விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்த நாளை வராஹ ஜயந்தியாகக் கொண்டாடுகிறோம்.வராக அவதார பக்தி பாடல்கள்.
வராஹ மூர்த்தி அவதாரம்
பூமியைக் காக்கப் பெருமாள் எடுத்த மூன்றாவது அவதாரம் வராஹ மூர்த்தி அவதாரம் ஆகும். வராஹ மூர்த்தியை மனதில் நினைத்து தினமும் 27 முறை அல்லது 108 முறை வராஹர் மந்திரத்தைச் சொல்லி வந்தால் கொடிய நோய்கள் நீங்க, பகை, தோஷங்கள் அழியும். கிரக தோஷம் நீங்க புதன் மற்றும் சனிக் கிழமைகளில் பெருமாள் சன்னதியில் நின்று இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறைசொல்லி வர வேண்டும். இராமாயணம், சடபாதபிராமணம், தைத்தர்ய ஆரண்யகம் உள்ளிட்ட இலக்கியங்களில் வராக அவதாரத்தைப் பற்றி குறிப்பு உள்ளது.
வராஹர் காயத்ரி மந்திரம்
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்!
நோய், பகை அழிய சொல்ல வேண்டிய வராஹ ஸ்லோகம்
ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்