வெளியிட்ட தேதி : 27.02.2021
Twitter rolls out voice DM feature in India
Gadgets

Twitter rolls out voice messaging DM feature in India

ட்விட்டர் சமீபத்தில் வாய்ஸ் நோட் அல்லது வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சத்தை (DM‍ : Direct Message) அதன் மைக்ரோ பிளாக்கிங் மேடையில் (microblogging platform) சோதிக்கத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் ஒரு கட்டமாக வெளியிடப்படும். இந்த புதிய அம்சத்தின் மூலம், குரல் ட்வீட்களை குரல் குறிப்புகளாக‌ டி.எம் அனுப்பலாம், இந்த‌ அம்சத்தை ட்விட்டர் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

ட்விட்டரின் இந்த‌ சோதனை அம்சம் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கும் பயன்படுத்த கிடைக்கும். வாய்ஸ் மெசேஜ் / குரல் செய்தியானது நீங்கள் வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் (ஆடியோவை) அனுப்புவதை போன்றதாகும்.

வாய்ஸ் மெசேஜ் அம்சம் இன்னும் சோதனை நிலையில்தான் உள்ளது. ஆக‌வே, இது ட்விட்டர் தளத்தின் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கவில்லை. இது ட்விட்டரின் சமீபத்திய Update-ன் ஒரு பகுதியாகும்.

இந்தப் புதிய அம்சத்தின் மூலம் ட்விட்டர் பயனர்கள் வாய்ஸ் மெசேஜ்களை (voice message) 140 வினாடிகள் வரை நீளமுள்ள ஆடியோ செய்திகளாக‌ தங்கள் நண்பர்கள் மற்றும் அவர்களது நெட்ஒர்க்கில் உள்ள அனைவருக்கும் அனுப்பலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.