வெளியிட்ட தேதி : 22.07.2021

China builds world's fastest train, capable of 600 km/hr

மணிக்கு 600 கிமீ வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக மாக்லேவ் ரயிலை (maglev train) அறிமுகப்படுத்திய‌தன் மூலம் சீனா அதை சாத்தியமாக்கியுள்ளது!. உலகின் வேகமான ரயிலை சீன‌ நாடு வெளியிட்டது.

அதிவேகமாக செல்லக்கூடிய காந்த ரயிலை சீனா பொது போக்குவரத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் மாக்லேவ் ரயிலை (maglev train) கடந்த 2019-ஆம் ஆண்டு சீனா வடிவமைத்தது. சில மாற்றங்களுடன் அதன் சோதனை ஓட்டத்தை கடந்த ஆண்டு சீனா வெற்றிகரமாக நிறைவு செய்தது.

தண்டவாளத்தை தொடாமல் காந்த சக்தியின் உதவியுடன் இயங்கும் இந்த அதிவேக மெக்லேவ் ரயிலில் 2 பெட்டிகள் முதல் 10 பெட்டிகள் வரை இணைக்கலாம். ஒரு பெட்டியில் சுமார் 100 பேர் பயணிக்க முடியும்.

மாக்லேவ் ரயில் (Maglev train) ஷாங்காயில் இருந்து பெய்ஜிங்கிற்கு 2.5 மணி நேரத்தில் செல்லும், அதேசமயம் அதிவேக ரயிலில் ஆனது இந்த‌ நிறுத்தங்களுக்கு இடையிலான‌ இலக்கை அடைய‌ 5.5 மணிநேரம் எடுத்துக்கொள்கிறது. மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்வதன் மூலம் உலகிலேயே அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் மெக்லேவ் ரயில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாக்லேவ் ரயிலின் மூலம் பெய்ஜிங் நகரத்திலிருந்து 620 மைல் (1000 கி.மீ.) தூரத்தில் உள்ள ஷாங்காய் நகருக்கு வெறும் 2.30 மணி நேரங்களில் பயணிக்கமுடியும். அதாவது, ஒரு விமானத்தின் மூலம் 3 மணிநேரத்தில் பயணிக்கக்கூடிய தூரத்திற்கு இந்த ரயிலின் மூலம் 5.30 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்பது ஆச்சரியமிக்கதே !.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.