பழநி முருகனின் கோவண ரகசியம்
Palani Murugan's Kovanam - Raja Alangaram secret
பழநி முருகனின் கோவண ரகசியம்
ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயரும் உண்டு. பழநியில் முருகப்பெருமான், மாலையில் இராஜ அலங்காரத்தில் காட்சி அருள்வார். இந்த அலங்காரம் ஆனது போலியான உலக வாழ்வினைக் குறிக்கின்றது. அதுபோல முருகக் கடவுள் காலை வேளையில் கோவணத்துடன் காட்சித் தருவார். நேற்று இருப்பது போல் இன்று இல்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.
"இந்த உலக வாழ்வு போலியானது, உன்னோடு நீ உடுத்தியிருக்கும் கோவணம் கூட உலகைவிட்டு நீ போகும்போது வருவதில்லை. எதுவுமே இல்லாமல் வந்தாய், எதுவுமே இல்லாமல் போவாய்", என்பதனை முருகப்பெருமான இந்த பழநி திருத்தலத்தில் உணர்த்துகிறார்.
இத்தகைய ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்கின்ற பெயரினாலும் அழைக்கப்படுகிறார். இதனால்தான் பழநிக்கு வருகைதந்த அவ்வையாரும் "பழம் நீ!" என்று முருகனை அழைத்தார்.
உங்கள் கருத்து : comment