வெளியிட்ட தேதி : 22.05.2021

5G Trials Set To Begin In India

4ஜி தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை 5ஜி கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. அடுத்த தலைமுறையாக இருக்கும் 5ஜி எப்போது அறிமுகமாகும் என்கின்ற‌ எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருக்கிறது.

5ஜி தொழில்நுட்பத்தை சோதித்து பார்க்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், விஐ, எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. இதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த சோதனையானது 6 மாதங்கள் நடைபெறும். நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமம், நடுத்தர நகரம் ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலமாக அனைத்து பகுதிகளிலும் தடையின்றி 5ஜி சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.

இந்த சோதனைகளுக்கு சீன நிறுவனங்களின் சாதனங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹூவாய் மொபைல் பயன்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தது, தற்போது சீன சாதனங்கள் பயன்படுத்த மாட்டோம் என தெரிவிக்கப்பட்டு விட்டன.

சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அறிந்த சீன அரசானது ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் எம்டிஎன்எல் போன்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்கு விண்ணப்பித்திருந்தன. பின்பு இந்ந நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்பங்களை வழங்கும் எரிக்ஸன், நோக்கியா, சாம்சங் மற்றும் சி-டாட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. ஜியோ நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த 5ஜி சோதனகளை நடத்தவுள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் 5ஜி தொழில்நுட்பம் ஆனது எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வரும் என்கின்றனர் வல்லுநர்கள். குறிப்பாக ஆகுமென்ட் ரியாலிட்டி (Augmented Reality - AI) மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality - VR) போன்றவற்றில் 5ஜி தொழில்நுட்பத்தின் பங்கு இன்றியமையாதது என கூறப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் திரைப்படங்கள், இணைய விளையாட்டு, பொழுதுபோக்கு செயலிகள், போன்றவற்றில் 5ஜி பெரும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.