சூரிய நமஸ்கார மந்திரம். Surya Namaskar - How to do Sun Salutation with Steps
சூரிய நமஸ்காரம் யோகாசனங்கள் உடன் செய்வது உங்கள் உடல் சுழற்சிக்கும் சூரியனுக்கும் இடையே இணக்கத்தை உருவாக்க உதவுகிறது.
சூரிய நமஸ்கார மந்திரம்
Surya Namaskar - How to do Sun Salutation with Yoga Steps.
ஓம் த்யேய꞉ ஸதா ஸவித்ருமண்டலமத்யவர்தீ
நாராயண꞉ ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட꞉ ।
கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ
ஹாரீ ஹிரண்மயவபு꞉ த்ருதஶங்க²சக்ர꞉ ॥
ஓம் மித்ராய நம꞉ । 1
ஓம் ரவயே நம꞉ । 2
ஓம் ஸூர்யாய நம꞉ । 3
ஓம் பாநவே நம꞉ । 4
ஓம் ககாய நம꞉ । 5
ஓம் பூஷ்ணே நம꞉ । 6
ஓம் ஹிரண்யகர்பாய நம꞉ । 7
ஓம் மரீசயே நம꞉ । 8
ஓம் ஆதித்யாய நம꞉ । 9
ஓம் ஸவித்ரே நம꞉ । 10
ஓம் அர்காய நம꞉ । 11
ஓம் பாஸ்கராய நம꞉ । 12
ஆதித்யஸ்ய நமஸ்காராந் யே குர்வந்தி திநே திநே ।
ஆயு꞉ ப்ரஜ்ஞாம் பலம் வீர்யம் தேஜஸ்தேஷாம் ச ஜாயதே ॥
சூரிய நமஸ்காரம் பலன்கள்
Benefits of Surya Namaskar Mantra in Tamil
சூரிய நமஸ்கார மந்திரம் சூரிய தேவனை வழிபடுவதற்கான மந்திரமாகும். சூரியனின் சுழற்சியைக் குறிக்கும் பன்னிரண்டு யோகாசனங்களை உள்ளடக்கியது, இது தோராயமாக பன்னிரண்டே கால் மணி நேரம் இயங்கும்.
இம்மந்திரத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் கூறி வழிபடுவது நல்லது. ஞாயிற்று கிழமையன்று விடியற் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, வீட்டிற்கு வெளியில் சூரியன் உதிக்கின்ற போது, அந்த சூரியனை பார்த்த படி இம்மந்திரத்தை 10 முறை அல்லது 108 முறை கூறி வழிபடுவதன் மூலம் முகத்தில் ஒருவித பிரகாசம் உண்டாகும். உடலின் எல்லா பகுதிகளிலும் இந்த மந்திரத்தின் அதிர்வு சென்று உடலுக்கு புத்துணர்வை தரும்.
மந்திரங்களை இணைத்து உச்சரிப்பது சூரிய நமஸ்காரத்தின் பயிற்சியை மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது. இந்த மந்திரங்களை ஓதுவதால் உடலிலும், சுவாசத்திலும், மனதிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றன. சூரிய நமஸ்கார மந்திரத்தை, சூரிய பகவானின் அருளைப் பெற அவற்றை உச்சரிக்கவும்.
உங்கள் கருத்து : comment