பிள்ளையார் கவசம்
பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும்.
விநாயகர் கவசம்
காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம் | Vinayagar Kavasam Lyrics in Tamil
தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க
வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தரதேக மகோற்கடர் தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்க
தடவிழிகள் பால சந்திரனார் காக்க !!
உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க
கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங் கணக்கிரீடர் காக்க
நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனிவாக்கை விநாயகர் தாம் காக்க
அவிர்நகை துன்முகர் காக்க
வளர் எழில் செஞ் செவி பாச பாணி காக்க
தவிர்தலுறாது இளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க !!
முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்க
காமுரு பூமுகந்தன்னைக் குணேசர் நனி காக்க
களங் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்கு கந்த
பூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசர் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகத்தினைத் துலங்கு ஏரம்பர் காக்க !!
பக்கங்கள், தொண்டை காக்க
பக்கம் இரண்டையுந் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரர் காக்க
விளங்கிலிங்கம் வியாள பூடணர் தாம் காக்க
தக்க குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்க கணபர் காக்க
ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க
முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்க
தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்குவார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அந்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க !!
திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க
அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர் தென் திசைகாக்க
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
விக்கினவர்த்தனர் மேற் கென்னுந் திக்கதனிற் காக்க
வாயுவிற் கச கர்ணர் காக்க
திகழ்உதீசி தக்கநிதி பர் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க !!
பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க
ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திறத்தால்
வருந்துயரம் முடிவிலாத
வேகமுறு பிணி பலவும் விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்துகாக்க !!
மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க
மதிஞானம் தவம் தானம் மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம் தானியம் கிருதம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !!
படிப்போர் நோயற்றவராய் வாழ்வார்
வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரியாதி எல்லாம் விகடர் காக்க
என்று இவ்வாறிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூறொன்றும்
ஒன்று உறா முனிவர் அவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற
வச்சிர தேகம் ஆகி மின்னும் !!
விநாயக கவசப் பலன்
யாத்திரையில் தோத்திரம் செய்தால் சகல
விக்கினமும் இரியல் போக
மூத்த பயன் கைகூடும் சமரின் மொழிந்
திடில் விசயம் முற்றும் நாளும்
ஏத்தியிரு முறை இருபத் தொருநாள் வந்
தித்டின் மாரணம் ஈண்டேதம்
பனமாதி நிலை பேறெய்தும்.
நித்தலு மூவேழுமுறை செபித்திடில்கா
ராக்கிருகநீங்கு மன்னர்
பொத்துமுளநிட்டூரம் போம் அரையன்
தனைக் காணும்போது முக்கால்
பத்தியின் ஓதிடின் அவன் தான் வசப்படுவன்
இதைத் தாளிப் பனைமெல்லேட்டில்
வைத்தெழுதிப் படிப்பினும் கேட்பினும் பூசை
வயக்கினும் வல் இடரும் தீரும்.
அன்பு, உறுதி, ஆசாரம் உடையார்க்கு இக்
கவசத்தை அறைக! அல்லார்க்கு
என்பெறினும் உரையற்க! எனக்கிளந்து
மரீசி தனது இருக்கை உற்றான்.
விநாயகர் புகழ்
கடவுளர்களில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். தமிழ் நாட்டில் பிள்ளையார் எனவும் அழைக்கபடுவார். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். ஆக விநாயகர் என்பது, இவருக்கு மேல் (முதன்மையானவர்) பெரிய தலைவர் இல்லை என்பது முழுப்பொருளாகும். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதுமாக காணப்படுகிறது.
இவருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், விக்னேஸ்வரன், ஹேரம்பன் என பலப் பெயர்கள் உள்ளது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் என அழைக்கப்படுகிறது. இந்த காணாதிபத்தியமானது பின்னர் சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. வைணவர்கள் விநாயகரை தும்பிக்கை ஆழ்வார் என அழைக்கிறார்கள். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்பாக முழுமுதற் கடவுளான விநாயகரை வேண்டியே செய்யப்படுகிறது.
மேலும் பல ஆன்மிகம் தகவல் பெற எங்கள் வலைத்தளம் வாருங்கள் : https://www.tamilgod.org
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்க சகல சௌபாக்கியங்களும் கிடைப்பது உறுதி. விநாயகர் குறித்து எவ்வளவோ பக்தி இலக்கியங்கள், பாடல்கள் பாடப் பெற்றிருந்தாலும் தமிழ் மூதாட்டியான புலவர் ஔவை பாட்டி உருவாக்கிய விநாயகர் அகவல் பல சிறப்புகள் வாய்ந்ததாகும். இந்த அகவலை பாடிய ஔவையார் பாட்டி வாழ்ந்த காலம் 14 ஆம் நூற்றாண்டு என கூறப்படுகிறது.
விநாயகர் அகவல் பாடலை மாதந்தோறும் வருகிற சதுர்த்தியின் போதும், சங்கடஹர சதுர்த்தியின் போதும், விநாயகர் சதுர்த்தியின் போதும் பாராயணம் செய்து வழிபட்டால் விநாயகர் இரட்டிப்புப் பலன்களை அருள்வது நிச்சயம்.
விநாயகர் கவசம் சிறப்புகள்
Pillaiyaar Kavasam / Vinayagar Kavacham Reading benefits
விநாயகர் முன்பு அமர்ந்து தனிச்சிறப்பு வாய்ந்த இந்த அகவலை மனத்தால் ஒன்றி பாராயணம் செய்தால் நம்முடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும். விநாயகர் அகவலை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களின் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும், வெற்றி உண்டாகும்.
இதை எட்டு நாட்கள் ஓதி வர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமா சித்தி கைகூடும் என்பது ஐதீகம். தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும், மேம்பட்டு சிறந்து திகழும்.
உங்கள் கருத்து : comment