கொடியேற்றத்துடன் துவங்கியது உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழா

உத்திரகோசமங்கையில் உள்ள உலகின் முதல் சிவாலயம் என்று அழைக்கப்படும் மங்களநாதசுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கையில் உள்ள உலகின் முதல் சிவாலயம் என்று அழைக்கப்படும் மங்களநாதசுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பழமையான கோவில் ஆகும். உலகில் முதலில் தோன்றிய சிவாலயம் என்றும் கூறப்படுகிறது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு காலை 9 மணிக்கு கோவிலின் தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஓத‌ மங்கள வாத்தியங்கள் முழங்க‌ கொடியேற்றப்பட்டு சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பத்து நாட்கள் காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் சிறப்பு தீபாரதனையும், சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் சுற்றி வரும் வீதியுலா புறப்பாடும் நடைபெறும். Uthirakosamangai Mangalanathaswamy Temple.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment