திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் இன்று திறப்பு

தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகள் படி நாளை முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை சொர்க்க வாசலுக்கு செல்ல பக்தர்களுக்கு கோயினுள் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் அதிகாலை திறக்கப்பட்டது. பக்தர்கள் இல்லாமல், ஆள் கூடமிலாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஒமைக்ரான், கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி சொர்க்க வாசல் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை பக்தர்களுக்கு திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட‌வில்லை. இந்த‌ அறிவிப்பு முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 6.15 மணிக்கு மேல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக‌ அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் திருக்கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி இல்லை என இந்துசமய அறநிலையத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ஆம் தேதி திருமொழித் திருநாள் உடன் துவங்கி நேற்று வரை பகல்பத்து திருவிழா நடைபெற்றது. விழா தொடர்ச்சியாக‌, இன்று தொடங்கி ஜனவரி 23-ஆம் தேதி வரை இராபத்து திருவிழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி இன்று முதல் 22-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் திறக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகள் படி நாளை முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை சொர்க்க வாசலுக்கு செல்ல பக்தர்களுக்கு கோயினுள் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment