திருப்பதியில் அலைமோதும் கூட்டம்... 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்...!
குழந்தைகளுக்கு பள்ளியில் கோடை விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையானை வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன சீட்டுக்களை தேவஸ்தான நிர்வாகம் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விற்பனை செய்து முடித்துவிட்டது. ஆகையினால் 300 ரூபாய் தரிசன சீட்டு கிடைக்காத பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
இதனால் திருப்பதியில் உள்ள சீனிவாசம் வளாகம், விஷ்ணுவாசம் வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திர வளாகம் ஆகிய இலவச தரிசன டோக்கன் வழங்கும் மையங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து டோக்கன்களை வாங்கி சென்றனர்.
இலவச தரிசனம்
இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் கிடைக்காத பக்தர்கள் அவர்களாகவே நேரடியாக திருப்பதி மலைக்கு சென்று இலவச தரிசன சீட்டு வாங்கும் வரிசையில் இணைந்து கொள்கின்றனர் இதன் காரணமாக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு இலவச தரிசனத்தின் வழியாகவாது ஏழுமலையான் தரிசனம் பெற்றுவிட வேணடும் என்ற ஆவலில் பக்தர்கள் திருப்பதி மலையில் காத்து கிடக்கின்றனர்.
இந்த நிலை இன்னும் சில நாட்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ள காரணத்தால் மூன்று நாட்கள் "விஐபி பிரேக்" தரிசன அனுமதியை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
உங்கள் கருத்து : comment