1,00,008 வடை மாலையுடன் காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1,00,008 வடை மாலையுடன் காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்.
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அமாவாசையன்று அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். இன்னாளில் தான் அனுமன் அவதரித்தார். இதையொட்டி நாமக்கல்லில் உள்ள18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை சாற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்திலும் பின்னர் மஞ்சள், சந்தனம், பன்னீர்,தயிர்,பால்,தேன்,திருமஞ்சனம் என் பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசித்தனர்.
Darshan Of Namakkal Anjaneyar with 1,00,008 Vada malai on the day of Hanumanth Jayanthi.
உங்கள் கருத்து : comment