மகர‌ ஜோதி தரிசனம் : சரண கோஷம் எழுப்பி, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...

சபரிமலையில் மகர‌ ஜோதி தரிசனத்திற்காக‌, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும் நிலையில் அங்கு சுமார் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்திருந்தனர். முன்னதாக மகர விளக்கு பூஜையை ஒட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பம்பையில் இருந்து 3 மணிக்கு புறப்பட்ட திரு ஆபரண பெட்டி வரலாற்று சிறப்பு மிக்க சரங்குத்திக்கு 5.30 மணிக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து மாலை 6 மணியளவில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் மற்றும் போர்க் கருவிகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அங்கிருந்து கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில் திரு ஆபரண பெட்டிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாலை 6.45 மணியளவில் கோயில் சன்னதிக்கு எதிரே உள்ள பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் ஜோதி சொரூபமாக காட்சியளித்தார். இதனை சரண கோஷம் எழுப்பி, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கேரளா மாநிலம் சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27 அன்று நடை அடைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து டிசம்பர் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. ஐயப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது.

Sabarimala Makara Jyothi 2023, மகர விளக்கு

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment