27 நட்சத்திரத்துக்குரிய பைரவ தலங்கள்

Bhairava Temples for each Nakshatram Birth Stars | 27 நட்சத்திர பைரவ‌ கோயில்கள்

27 நட்சத்திரங்களுக்கு உகந்த பைரவர் கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. 27 நட்சத்திரக்காரர்களும் அவர்களுக்கு உகந்த பைரவர் கோவில்களில் சென்று வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.

1.அஸ்வினி

ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.

2.பரணி

ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.

3.கார்த்திகை

ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.

4.ரோகிணி

ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்-கண்டியூர், தஞ்சாவூர்.

5.மிருகசீரிஷம்

ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)

6.திருவாதிரை

ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)

7.புனர்பூசம்

ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமி கள் மடாலயம்.

8.பூசம்

ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்

9.ஆயில்யம்

ஸ்ரீ பாதாள பைரவர்-காளஹஸ்தி.

10.மகம்

ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டை யின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.

11.பூரம்

ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.

12.உத்திரம்

ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்- சேரன்மகா தேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.

13.அஸ்தம்

ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.

14.சித்திரை

ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி- மல்லி கார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.

15.சுவாதி

ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

16.விசாகம்

ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.

17.அனுஷம்

ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.

18.கேட்டை

ஸ்ரீகதாயுத பைரவர்- சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.

19.மூலம்

ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.

20.பூராடம்

ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.

21.உத்திராடம்

ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.

22.திருவோணம்

திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.

23.அவிட்டம்

சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.

24.சதயம்

ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.

25.பூரட்டாதி

கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில்.

26.உத்திரட்டாதி

ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்- சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்ப கோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.

27.ரேவதி

ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்- தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment