ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! பாடல் வரிகள் - Esane sivane Potri ! Iraiva Un Thiruthal Potri ! Tamil Lyrics
நீரினை சிரசில் கொண்டு
நெருப்பினை கையில் கொண்டு
பாரினில் பக்தர்தம்மை
பாசமுடனே காக்கும்
ஈசனே சிவனே போற்றி!
இறைவா உன் திருத்தாள்போற்றி!
வாசமாய் வாழ்க்கை மாறிட
வணங்குவோம் சிவனின் பாதம்
சிவம் என்று சொல்லும்போதே
சிந்தையது தெளிவு பெறும்
அவன் கருணைகங்கை
ஆறாகப் பாய்ந்துவரும்
நினைவெலாம் சிவமயம்
நித்தியமென்றாகிவிட்டால்
கனவிலும் எமபயமில்லை
கருத்தினில் இதனைக்கொள்வோம்!
அன்பிற்குமறுபெயராய்
அகிலத்தை ஆளுபவன்
என்புக்கு உள்கடந்துமனத்தில்
ஏகாந்தமாய் இருக்கின்றவன்
உருவமாய் உள்ளவனே
உள்ளத்தில் உறைவதை
உணர்ந்தபின் தாழ்வில்லை
உமாமகேசுவரனின்
கருணைக்கு ஏது எல்லை!
உங்கள் கருத்து : comment