Home » RSS

கைபேசியில் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது ?

கைபேசியில் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது ?

நடைபெறவிருக்கும் அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய‌ ஐந்து மாநிலங்களில் உள்ள‌ வாக்களர்கள் இந்த புதிய டிஜிட்டல் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் வாக்காளர்கள் அடையாள அட்டையைப் பெறலாம்.
e-EPIC : இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் திட்ட‌மான இ-இபிஐசி (மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியின் முதல் ட்வீட் 2.9 மில்லயன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது

ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியின் (Twitter founder Jack Dorsey) முதல் ட்வீட் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு $2.9 (£2.1m) க்கு விற்கப்பட்டுள்ளது. இதனை மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் Sina Estavi விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

"just setting up my twttr," என்கின்ற‌ வாசகம் தாங்கிய‌ இந்த‌ முதல் ட்வீட்டானது முதன்முதலில் மார்ச் 21, 2006 அன்று ஜாக் டோர்சியால் வெளியிடப்பட்டது. இப்போது, ஜாக் டோர்சியால் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்குவதற்காக அவரது முதல் ட்வீட் ஏலம் விடப்பட்டது.

130 கோடி போலி கணக்குகளை நீக்கியது பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து சுமார் 130 கோடி போலியான‌ கணக்குகளை நீக்கியுள்ளது. இவை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்தது.

இனி காத்திருக்க‌ வேண்டியதில்லை ; வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் ஃபாஸ்ட் ஃபார்வேட் அம்சம் ||

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு வாய்ஸ் மெசேஜை FAST FORWARD செய்யும் புதிய வசதியை கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீண்ட ஆடியோ மெசேஜ்களை கேட்பதை எளிதாக்கும் புதிய அம்சத்தை (new voice messages playback speed feature) கொண்டுவர உள்ளது. ஒரு வாட்ஸ்அப் ஆடியோ அல்லது வாய்ஸ் மெசேஜை 1.5எக்ஸ் அல்லது 2எக்ஸ் வேகத்தில் பிளே செய்து இயக்க முடியும். மேலும் பயனர்கள் ஸ்டாண்டர்ட் 1 எக்ஸ் வேகத்திலும் ஆடியோ மெசேஜ்களை கேட்டகாலம் என்று கூறப்படுகிற‌து. இந்த அம்சம் 1x, 1.5x மற்றும் 2x ஆகிய மூன்று வேக நிலைகளைக் கொண்டுள்ளது.

2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது

நாம் இப்போது உப்பை ஒரு மலிவான உணவுப் பொருளாகக் காண்கிறோம் என்றாலும், அதன் வளமான வரலாறு நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அறிந்ததைவிட பல வழிகளில் தொடுகிறது. உதாரணமாக, "salary" என்ற சொல் லத்தீன் வார்த்தையான "sal" என்ற வார்த்தையிலிருந்து உருவானது. ஏனென்றால், பண்டைய காலங்களில், உப்பு மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தது, ரோமானிய இராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு சில நேரங்களில் நாணயத்திற்கு பதிலாக உப்பு வழங்கப்பட்டது. இந்த மாதாந்திர கொடுப்பனவு “salarium” என்று அழைக்கப்பட்டது. இப்போது புரிகிறதா "salary (சம்பளம்)" என்ற‌ வார்த்தை ஆங்கிலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று !!!.

பண்டைய உலக நாடுகள் முழுவதும், எப்போதும், உப்பு ஒரு முக்கிய வளமாக இருந்து வந்திருக்கிறது. கிமு 6050 வரை, சீனாவிலிருந்து எகிப்து வரை எண்ணற்ற நாகரிகங்களிலும் உப்பு ஒரு முக்கிய பங்கைக் வகித்துள்ளது. இது பல்வேறு நேரங்களிலும் இடங்களிலும் நாணயமாகவும் பரிமாற்றப்பட்டு செயலாற்றியது. மேலும் உப்பிற்காக‌ கசப்பான போர்களும் காரணமாகின‌.

'உப்பு' தூய்மையைக் குறிக்கிறது. இது அனைத்து உணவுப் பொருட்களிலும் மிகவும் பயனுள்ள மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, அதனால்தான் உப்பு - “வெள்ளை தங்கம் (white gold)” என்றும் குறிப்பிடப்படுகிறது - பொருளாதார ரீதியாக எப்போதும் முதன்மையான‌ முக்கியத்துவத்தைக் கொண்டிருந்திருக்கிறது.

தீவிரமாக‌ பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் இதயத்தை காயப்படுத்தும் !!

தீவிரமாக‌ பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் இதயத்தை காயப்படுத்துகின்றன ?

தீவிரமாக‌ பதப்படுத்தப்பட்ட உணவுகள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் உள்ளன: விற்பனை இயந்திரங்கள், துரித உணவு உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் சூப்பர் மார்கட்களில்.

ஒரு புதிய ஆய்வின்படி, முக்கியமாக தீவிரமாக‌ பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது இருதய நோயினை மேலோங்கச் செய்யும் மற்றும் இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது. சராசரி அமெரிக்கர்கள் அவர்களின் அன்றாட கலோரிகளில் பாதியை அதி-பதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து பெறுகிறார்கள், இதில் புரோட்டீன் பார்கள், காலை உணவு தானியங்கள் மற்றும் தொழில்துறை ரீதியாக உற்பத்தி செய்யப்படும் ரொட்டிகள் அடங்கும். இவற்றுள் பல‌ ஆரோக்கியமானவை என மக்களிடம் சந்தைப்படுத்தப்படும் பல உணவுகள் அடங்கும். ஆரோக்கியமான‌வை எனும் அறிவிப்பு விற்பனைக்காக‌ மட்டும் தான். உண்மையில் அவை என்ன‌ செயும் ?

ட்விட்டரின் அண்டூ (Undo) அம்சம் விரைவில் .. ஆனால் சந்தாதாரர்களுக்கு மட்டுமே !!

ட்விட்டரின் அண்டூ (Undo) அம்சம் விரைவில் .. ஆனால் சந்தாதாரர்களுக்கு மட்டுமே !! சமூக வலைதளமான ட்விட்டர், பயனர்களின் நெடுநாளாக எதிர்பார்த்து வரும் ஒரு புதிய அம்சத்தை விரைவில் கொண்டு வர உள்ளது. அதன் மூலம் இனி பயனர்கள் தாங்கள் பதிவு செய்த ட்வீட்டுகளை திரும்பப் பெறலாம் என கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, ட்விட்டர் அனுப்புதலை செயல்தவிர்க்கும் (Undo Send) டைமரை சோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

உளவு பார்ப்பதற்கு பதில் நிறுவனத்தை மூடி விட்டு சென்று விடுவேன்: சீனாவிற்கு எல‌ன் மஸ்க் பதிலடி

உளவு பார்ப்பதற்கு பதில் நிறுவனத்தை மூடி விட்டு சென்று விடுவேன்: சீனாவிற்கு எல‌ன் மஸ்க் பதிலடி
டெஸ்லா இன்க் (Tesla Inc.) தலைமை நிர்வாகி எலன் மஸ்க் (Elon Musk) சனிக்கிழமையன்று, தனது நிறுவன கார்களை உளவு பார்க்க யாராவது பயன்படுத்தினால், தனது நிறுவனம் மூடப்படும் என்றும், ”உளவு பார்த்து தொழில் செய்வதை விட, நான் என் நிறுவனத்தை மூடி விடுவதை மேலாகக் கருதுவேன்” என்று எலன் மஸ்க் கூறினார். சீனாவின் இராணுவம் டெஸ்லா கார்களை தடை செய்துள்ளதாக வந்த செய்திகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இப்படி தெரிவித்தார்.

மார்ச் 23இல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளியீடு: அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு ?

மார்ச் 23இல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளியீடு: அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு ?

ஒன்பிளஸ் (OnePlus) இந்த வார தொடக்கத்தில் அதன் ஸ்மார்ட்வாட்சை (smartwatch) அறிமுகப்படுத்தி உறுதிசெய்தது.ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது வரவிருக்கும் ஸ்மார்ட்வாட்சினை குறித்து சில‌ தகவல்களை இங்கே பார்ப்போம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒன்பிளஸ் தனது முதல் ஃபிட்னஸ் பேண்டை முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு "தடையற்ற இணைப்பு" மற்றும் "உயரிய‌ சிறந்த அனுபவத்தை" வழங்கும் என்று வலியுறுத்துகிறது.

ட்விட்டர் செயலியில் இனிமுதல் யூடியூப் வீடியோக்களை ப்ளே செய்து பார்க்கலாம்

ட்விட்டர் அதன் மொபைல் செயலியில் (Mobile App) வீடியோக்களை ப்ளே செய்யும். இந்த‌ வீடியோக்கள் அனைத்தும் ட்விட்டர் மேடையில் நேரடியாக பதிவேற்றியவையாக‌ இருக்கும். ஆனால், யாராவது ஒரு யூடியூப் (YouTube) இணைப்பை இடுகையிட்டால், அது உங்களை உலாவி அல்லது YouTube பயன்பாட்டிற்கு திருப்பிவிடும்.