வெளியிட்ட தேதி : 11.08.2017
survivor-nagasaki-hiroshima-bomb-blast
பூமி

Man who survived both Hiroshima and Nagasaki atomic bombs

இரண்டு அணுகுண்டுத் தாக்குதல்களால் உயிர் பிழைத்திருப்பதாக அறியப்படும் சுட்டோமு யமாகுச்சி (Tsutomu Yamaguchi), உலகின் மற்ற பகுதிகளுக்கு கதை சொல்லும்படியாக‌ உயிர்வாழ்ந்துள்ளார். இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நாகசாக்கி அணுகுண்டு வெடிப்பின் 72 வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. சுடோமுவின் 90வது வயதில், இரண்டு அணுகுண்டுகளையும் தாங்கிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவும் ப‌ட்டார்.

இரண்டாம் உலகப்போரில், அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி தனது முதல் அணுகுண்டு தாக்குதலை நிகழ்த்தியது. மூன்று தினங்கள் சென்ற‌ பின்னர் இரண்டாவது குண்டினை நாகசாகி நகரத்தின் மீது போட்டது. இவ்விரண்டு அணுகுண்டு தாக்குதல்களினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முடியவில்லை.

இந்நிலையில் இந்த இரண்டு குண்டுகளின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டை சேர்ந்த சுடோமு யமாகுச்சி என்பவர் 90 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்திருக்கிறார். யமகுசி 93 வயதில், வயிற்றில் புற்றுநோயால் இறந்தார். 2009 ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உயிர் அவர் மட்டுமே.

அணுகுண்டின் கதிர்வீச்சால் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட ஜப்பானீய‌ மக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், 93 வயது வரை வாழ்ந்துகாட்டிய‌ சுடோமு ஒரு சகாப்தமே.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.