வெளியிட்ட தேதி : 16.03.2021
Netflix App home screen
பொழுதுபோக்கு

How to stop Netflix autoplaying trailers

டிவியில் நெட்ஃபிக்ஸ் (Netflix) பார்க்கலாம், ஆனால் வீட்டிலிருந்து வெளியூருக்கு செல்லும்போது மடிக்கணினியைப் பயன்படுத்தி தான் நெட்ஃபிக்ஸ் (Netflix) வீடியோக்க்களை பார்க்க நேரிடும்‌. நெட்ஃபிக்ஸ் வலைத்தளம் (Netflix website) மிகவும் நேர்த்தியாக இருக்கும், என்றாலும் நெட்ஃபிக்ஸ் தளத்தை திறந்தவுடன் டிரெய்லர்கள் தானாக இயங்கத் தொடங்கும். இது எரிச்சலூட்டக் கூடும்.

அதிர்ஷ்டவசமாக, நெட்ஃபிக்ஸ் (Netflix) நிறுவனம் ஒரு புதிய ஆப்ஷனை (new option) உருவாக்கியுள்ளது, இது முன்னோட்டங்கள் (previews), ஆடியோ அல்லது இரண்டையும் முடக்க உதவுகிறது. இந்த அம்சத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்க்கலாம்:

புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில் வாட்ஸ் ஆப் செயலியினை பயன்படுத்துவதை பல பயனர்கள் தவிர்த்திருந்தனர். எனினும் எந்தவிதமான விதிமுறைகளையும் இதுவரை வாட்ஸ்அப் மாற்றவில்லை.

Screenshot-Netflix-audio-previe-settings-toggle
  • உங்கள் டெஸ்க்டாப் உலாவியில் நெட்ஃபிக்ஸ் தளத்தை திறக்கவும்.
  • மேல் வலது மூலையில் உள்ள செட்டிங்ஸ் மெனுவைக் கிளிக் செய்க.
  • முன்னோட்டங்கள், ஒலிகள் அல்லது இரண்டடையும் டோகிள் பட்டனை (Turn off the toggle) பயன்படுத்தி அணைக்கவும்.

இப்போது, நீங்கள் ஒரு படம் அல்லது வீடியோ தலைப்பின் மீது மவுஸ் கர்ஸரை வைக்கும் போது, தானாக டீஸர்கள் ப்ளே ஆவதில்லை.

நீங்கள் செட்டிங்ஸ் இல் ஆடியோவை ஆஃப் செய்தால், நெட்ஃபிக்ஸ் டிரெய்லர்கள் ஓசையின்றி ஊமையாக‌ ப்ளே ஆகும், மேலும் அந்த தலைப்புக்கான ஸ்பீக்கர் பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் ஆடியோவைக் கேட்கலாம். ஆடியோ இயக்கப்பட்ட நிலையில் பார்க்க விரும்பும் டிரெய்லரைத் தேர்வுசெய்ய முடியும் என்பதால் இது மிகவும் எளிதான‌ வசதியாகிறது.

Screenshot-netflix-audio-off-title
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.