வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து வழிகாட்ட முருகன் பாடல் வரிகள். கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம் இசை: திரு.வைத்தியநாதன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள். Vel vanthu vinai theerka mayil vanthu vazhi kaatta Songs - Murugan Devotional Song lyrics.
வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி - குமரன்
கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல்வந்து)
பால்கொண்டு நீராட்டி
பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ்மாலை கேட்டேனடி
பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில் - கந்தன்
எனைக் கண்டானடி
சிந்தையில் நின்றானடி
வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி - அந்தக்
காட்சியென்றும் இனிக்குமடி!
(வேல்வந்து)
உங்கள் கருத்து : comment