வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி - ஏ.ஆர். ரமணி அம்மாள் பாடிய முருகன் பாடல் வரிகள். Varuvandi tharuvandi malayandi Pazhani malai aandi by A.R Ramani Ammal Murugan Songs - Lord Murugan Devotional songs Tamil Lyrics
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி
சரணம் - 1
சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
சரணம் - 2
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி
சுவை பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி
சுவை பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
சரணம் - 3
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
முருகனின் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி
உங்கள் கருத்து : comment