மனமே உனக்கேன் இந்த வாட்டம் பாடல்
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய மனமே உனக்கேன் இந்த வாட்டம் பாடலின் வரிகள்
மனமே உனக்கேன் இந்த வாட்டம்
கண் எதிரே தெரியுது கந்த கோட்டம்
மனமே உனக்கேன் இந்த வாட்டம்
கண் எதிரே தெரியுது கந்த கோட்டம்
குகனே குகனே எனக் கூவு
உடன் வருவான் முருகன் மயில் மீது
சினமோ பகையோ நமக்கெதற்கு
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு
குமரன் தனிவேல் துணை இருக்கு
எதற்கும் இனிமேல் பயம் எதற்கு
(மனமே உனக்கேன்)
போரூர் அழகன் புன்னகையில்
கோலம் காண்பார் கொடுத்து வைத்தார் (2)
வேளூர் வரதன் திரு உருவை
வேண்டி வந்தார்... துயர் களைந்தார்
மனமே உனக்கேன் இந்த வாட்டம்
கண் எதிரே தெரியுது கந்த கோட்டம்
உங்கள் கருத்து : comment