வெளியிட்ட தேதி : 22.05.2021
Reliance Industries
பணம் முதலீடு

RIL pays bonuses to over 2 lakh employees, commits support during pandemic

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries), இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் நிறுவனம் ஆகும். உலகள‌விலும், இந்தியாவிலும் கொரோனா தொற்று தினமும் அச்சுறுத்தும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது நிறுவனத்தில் இருக்கும் 2 லட்சம் ஊழியர்களுக்குப் போன்ஸ் வழங்குவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) அறிவித்துள்ளது.

இந்த‌ திடீர் போனஸ் அறிவித்துள்ளதற்கு என்ன காரணம்..?

2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதுமாக‌ லாக்டவுன் அறிவிக்கப்பட்ட‌ நிலையில் வர்த்தகம் ஸ்தம்பித்த‌து. வருவாய் வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளும் கடுமையாகப் பாதித்து இருந்து வேளையில், ரிலையன்ஸ் தனது ஜியோ மற்றும் ரீடைல் வர்த்தகப் பிரிவின் பங்குகளை விற்று சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தைப் பெற்று முதலீட்டாளர்கள் மத்தியில் அதீத நம்பிக்கையைப் பெற்றது.

ரிலையன்ஸ் அறிவித்துள்ள போன்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் O2C, ரீடைல், டெலிகாம் வர்த்தகத்தில் இருக்கும் 5 பிரிவுகளில் இருக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் (Reliance Industries) நீண்ட காலமாகத் திட்டமிட்டு இருந்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகளவிலான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற்று வந்தது. இதேவேளையில் டெலிகாம் சேவையிலும் பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்தது மட்டும் அல்லாமல் தொடர்ந்து சேவை வர்த்தகம் வர்த்தக விரிவாக்கம் பணிகளைச் செய்து வருகிறது.

இந்த‌ வளர்ச்சியின் எதிரொலியாக 2020-21ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 35 சதவீத வளர்ச்சியில் 53,739 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது. இந்த அதிரடி வளர்ச்சியைக் கொண்டாடும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் தனது 2 லட்சம் ஊழியர்களுக்குச் செயல் திறன் அடிப்படையிலான போனஸ்/வேரியபில் பேஅவுட் (Bonus/variable Payout) ஆகியவற்றை அளிக்க முடிவு செய்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.