வெளியிட்ட தேதி : 12.11.2021

How to earn twenty to thirty thousand rupees per Day ?

எனக்குத் தெரிந்து இத்தைகைய‌ தொழில்முறையை கையாள்பவர்கள் அத்தொழிலில் முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இச்செயலை செய்ய‌ இயலும். என் அனுபவத்தில் இது போல் தினமும் 20,000 முதல் 30,000 வரை சம்பாதிக்கின்ற‌ ந‌பர்களை நான் பார்த்ததே இல்லை. என்றாலும் நான் பல‌ வலைத்தளம் வழி தெரிந்து கொண்டவற்றை இங்கே பகிர்கின்றேன்.

இது நகை (ஆபரணத் தொழில்) : பழைய நகைகளை விலைக்கு வாங்கி சுத்தம் செய்து சுத்தத் தங்கமாக மாற்றி வியாபாரம் செய்வதில் நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். கமிசன் மண்டி. வியாபாரமும் அப்படித்தான் லாபம் தரக்கூடியது.நாம் செய்ய வேண்டியது தொழிலில் எல்லா தந்திரங்களும் தெரிந்திருந்தும் தகுந்த முதலீடு இல்லாமல் தவிப்பவர்களை வலை விரித்து இழுக்க வேண்டும்.

இந்தொழிலில் வல்லுனர்கள் பிறருக்கு தொழில் செய்ய‌ உதவும் ஆலோசகர் அல்லது பங்குதாரர் என்கின்ற‌ நிலையில் நீங்கள் அவர்களுக்கு தொழில் செய்ய நிதி உதவி (வட்டிக்கு பணம்) அல்லது அவர்களுக்கு பணம் பெறுவதற்கான‌ வழிகளை எடுத்துரைத்து சட்டரீதியாக‌ கிடைக்கின்ற லாபத்தில் ஆளுக்கு பாதி என‌ பிரித்துக்கொள்ளலாம். அப்படி கிடைக்கின்ற பங்கினை இருவரும் (தொழில் செய்பவர்களும்) கொடுத்த பணத்திற்கான வட்டி விகிதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து கூடுதலாகவே கிடைக்கப்பெற்றால் அதனை தொடர்ந்து செய்யலாம். அப்படி வட்டி விகிதம் என்பது கட்டுப்படி ஆகவில்லை என்றால் அதிலிருந்து ஒதுங்கி விடலாம்.

எடுத்துக்கட்டு. ) ஒரு லட்சம் ரூபாய் பணம் அதிகாலை ஆறு மணிக்கு கிடைக்கப்பெற்றால், இரவு 10 மணிக்குள் அந்தப் பணம் (அசல் ஆவது) நமது கைக்கு வந்துவிடவேண்டும். அன்றைய கணக்கானது அன்றோடு முடித்துக்கொண்டு மறுநாள் காலை ஆறு மணிக்கு அடுத்த கணக்கை (அடுத்த‌ நாளின்) துவங்க வேண்டும்.

உண்மையில் நல்ல‌ வியாபாரம் என்பது, வாங்கும் சரக்கு நமது பார்வையில் மற்றும் ஆவண‌ கணக்கின்படி, நமது பொறுப்பில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தவறினால் அது ஏடாகூடம் ஆகிவிடும் !!.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.