வெளியிட்ட தேதி : 02.03.2021
Gold Price Today: Gold declines Rs 712
ஆபரணம்

Gold Price Today: Gold declines Rs 712

தங்கம் ஆபரண விலை கடந்த ஏழு நாட்களில் ஒரே நாள் மட்டும் தான் ஏற்றம் கண்டுள்ளது. ஏனைய‌ ஆறு நாட்கள் சரிவினைக் தான் கண்டுள்ளது. தங்க நகை ஆர்வலர்களுக்கு இந்த‌ செய்தி ஆறுதலான‌ சிறந்த வாய்ப்பாகிறது. இந்தியாவில் தங்கத்தினை விரும்பும் மகளிர் அதிகமே, அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிகமாகும். அந்தளவுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு. நடப்பு ஆண்டின் துவக்கம் முதல் தங்கத்தின் விலையானது தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இது தங்க நகை ஆர்வலர்களுக்கு, சர்பிரைஸ் தருவதாக‌ உள்ளது.

சென்னையில் இன்று தங்க ஆபரணத்தின் விலையானது சவரனுக்கு 700 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 89 ரூபாய் குறைந்து, 4,266 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 712 ரூபாய் குறைந்து 34,128 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 97 ரூபாய் குறைந்து 4,654 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 776 ரூபாய் குறைந்து 37,232 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இது சர்வதேச தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கத்தின் எதிரொலியால் எற்படும் நிகழ்வு என்றாலும், இந்தியாவில் ஆபாரண தங்கத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், தங்க ஆபரண விலையில் அதன் எதிரொலி பெரியளவில் இருப்பதில்லை. எனினும் கடந்த சில வாரங்களாகவே சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்தியாவில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அது இன்னும் விலை சரிவுக்கு வழிவகுத்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.