வெளியிட்ட தேதி : 17.03.2021
Xiaomi Mi 11 Star Diamond Smart phone
Gadgets

Xiaomi Mi 11 Star Diamond Gift Box Edition with glittery design launched in China

சயோமி சமீபத்தில் Mi 11 இன் புதிய வெர்ஷனான‌ ' Mi 11 ஸ்டார் டயமண்ட் எடிஷன்' ((Xiaomi Mi 11 Star Diamond) என்ற ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பரிசளிப்பதை நோக்கமாகக் கொண்டு பிளாஃக்ஷிப் சந்தையில் பெண்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு சிறப்பான‌ ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் 'ஸ்டார் டயமண்ட் எடிஷன்' கவர் 10,000 உட்பொதிக்கப்பட்ட படிகங்களைக் கொண்டுள்ளது.

சயோமி மி 11 ஸ்டார் டயமண்ட் பதிப்பின் டிஸ்பிளே அளவு 6.81 இன்ச் ஆகும். இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் AMOLED பேனலைக் கொண்டுள்ளது. டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் விக்டஸால் (Gorilla Glass Victus) மேலும் பாதுகாக்கப்படுகிறது, சாதனத்தின் பின்புறம் கொரில்லா கிளாஸ் 5 ஆல் (Gorilla Glass 5) பாதுகாக்கப்படுகிறது.

சயோமி மி 11 ஸ்டார் டயமண்ட் (Xiaomi Mi 11 Star Diamond) பரிசளிப்பதை நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பதாகும். முதன்மையாக பெண்களுக்கு என்று உருவாக்கப்பட்டது. ‘ஸ்டார் டயமண்ட் பதிப்பு’ 10,000 உட்பொதிக்கப்பட்ட படிகங்களைக் கொண்ட ஒரு அட்டையுடன் வருகிறது. மிகவும் பிரகாசமாகவும், ஒட்டுமொத்தமாக‌ ஒரு பிரீமியம் உணர்வை ஏற்படுத்துகின்றது. இது Mi 11 கைபேசியை ஒத்த‌ அனைத்து விவரக்குறிப்புகளையும் கொண்டுள்ளது.

Xiaomi Mi 11 குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC பிராஸசரால் இயக்கப்படுகிறது. 256 ஜிபி உள் சேமிப்பு உள்ளது. இது 108MP முதன்மை சென்சார், 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 5MP டெலி-மேக்ரோ சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Xiaomi Mi 11 ஸ்டார் ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12.5 இல் இயங்குகிறது. இது 55W பாஸ்ட் சார்ஜ் செய்வதற்கான ஆதரவுடன் 4,600 எம்ஏஎச் பேட்டரியை (4600mAh battery) கொண்டுள்ள‌து. Mi 11 ஸ்டார் டயமண்ட் பதிப்பு 50W பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

பளபளப்பான அட்டகாசமான கவர் மற்றும் பிரகாசமான பேக்கேஜிங் இந்த‌ கைபேசியினை கூடுதலாக கவருவதால், மி 11 ஸ்டார் டயமண்ட் (Xiaomi Mi 11 Star Diamond) பதிப்பு நிச்சயமாக ஒருவருக்கு பரிசளிக்க ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.