வெளியிட்ட தேதி : 02.08.2021

Using an ancient Android phone? You won't be able to sign into Google after September 27.

ஸ்மார்ட் ஃபோன் பயனர்கள், இனி கடந்த தசாப்தத்தில் வெளியிடப்பட்ட கைபேசியை வாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது போலும் !. மிகவும் பழைய ஆண்ட்ராய்டுகளுக்கான ஆதரவை கூகுள் முற்றிலும் நிறுத்தவுள்ளது.

இந்த‌ செய்தி கூகிளில் இருந்து தான் வந்தது (ரெடிட்/எங்கட்ஜெட் வழியாக), கூஃகிள் தனது ஆதரவு ஆவணத்தில் இந்த‌ மாற்றத்தை கோடிட்டுக் காட்டியது..

"எங்களின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, எங்கள் பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக‌, ஆண்ட்ராய்டு 2.3.7 அல்லது அதற்கும் குறைவான ஆண்ட்ராய்டு சாதனங்களில் செப்டம்பர் 27, 2021 முதல் உள்நுழைவதை (sign in into) Google இனி அனுமதிக்காது. செப்டம்பர் 27 க்குப் பிறகு நீங்கள் உங்கள் சாதனத்தில் உள்நுழைய‌ முயற்ச்சித்தால் நீங்கள் கூகுள் தயாரிப்புகள் மற்றும் ஜிமெயில், யூடியூப் மற்றும் மேப்ஸ் போன்ற சேவைகளைப் பயன்படுத்த முயற்சிக்கும்போது பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் பிழைகள் கிடைக்கும் "என்று ஆவணம் கூறுகிறது.

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகுள் ஆப்ஸ் மற்றும் சேவைகள் எவ்வளவு ஒருங்கிணைந்தவை என்பதைக் கருத்தில் கொண்டு, பயனர்களுக்கு இந்த பழைய‌ கைபேசியானது உண்மையில் பயனற்றதாகிவிடும். நம்பிக்கை இருக்கிறது என்றாலும் - உங்கள் அண்ட்ராய்ட் சாதனத்தை புதிய ஆண்ட்ராய்டு பதிப்பில் (3.0+ அல்லது அதற்கு மேல்) புதுப்பிக்க முடிந்தால், இந்த சோகமான விதியைத் தவிர்க்க செய்யலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.