வெளியிட்ட தேதி : 23.11.2021

Google explains how Pixel 6 charging works, reveals peak wired power draw/h4>

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல முதன்மை ஸ்மார்ட்போன்களைப் (flagship smartphones) போலவே, கூகிள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ (Google Pixel 6 and Pixel 6 Pro) ஆகியவை வாங்கப்படும் பெட்டியில் சார்ஜருடன் வருவதில்லை. அதற்கு பதிலாக, கூகிள் சாதனங்களுக்கு கூகுள் 30 வாட் பாஸ்ட் சார்ஜரை தனியாக விற்பனை செய்து வருகிறது.

Google நிறுவனத்தின் Pixel 6 சீரிஸ் மாடல்களில் அதிகளவு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது சமீபத்திய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் 30W வேகமான சார்ஜிங் ஆதரவை வழங்குகின்றன என்று பல விமர்சகர்கள் மற்றும் பிக்சல் 6 வாங்குபவர்களும் நினைத்துக் கொள்ள‌ வழிவகுத்தது. இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் கண்டறிந்தபடி, பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ உண்மையில் 30W இல் சார்ஜிங் செய்யப்படுவதில்லை.

2வது-ஜென் பிக்சல் ஸ்டாண்ட்
கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோவை விரைவாக சார்ஜ் செய்யத் தேவையான அதிகபட்ச சக்தியை வழங்குவதற்காக 2வது-ஜென் பிக்சல் ஸ்டாண்டை வடிவமைத்துள்ளது.

2nd-gen Pixel Stand


பிக்சல் 6 தொடருக்கான 30W சார்ஜரை கூஃகிள் விற்றாலும், பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஆகியவை 21W மற்றும் 23W பீக் பவர் டிராவைக் கொண்டுள்ளன என்பதை கூகுள் இப்போது தெளிவுபடுத்தியுள்ளது. பிக்சல் 6 கைபேசி குறைந்த பவரில் (சக்தியில்) இயங்கும் போது, அவை 21W மற்றும் 23W சக்தியைப் பெற்று, 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 30 நிமிடங்கள் ஆகும்.

அடுத்த அரை மணி நேரத்தில், ஃபோன்கள் மெதுவான வேகத்தில் சார்ஜ் செய்து, சாதனத்தின் பயன்பாடு மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து 80 சதவிகிதம் சார்ஜ் ஆகிவிடும். பேட்டரி செல், சிஸ்டம் டிசைன், டெம்பரேச்சர், சிஸ்டம் யூசேஜ் மற்றும் ஸ்டேட் ஆப் சார்ஜ் உள்ளிட்ட காரணிகளே சார்ஜிங் ரேட்டை நிர்ணயிக்கிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.