வெளியிட்ட தேதி : 02.03.2021
OnePlus Nord gets stable OxygenOS 11 update
Gadgets

OnePlus Nord gets stable OxygenOS 11 update

ஒன்பிளஸ் நோர்ட் (OnePlus Nord) ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த OxygenOS 11 அப்டேட் கிடைத்துள்ளது. இந்த அப்டேட் பயனர்களுக்கு கண்டிப்பாக ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். மேலும் மேம்பட்ட டிஸ்பிளே அம்சம் மற்றும் மென்பொருள் வசதியில் சிறந்த மாறுதல்களைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட் இடைமுகத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது டார்க் மோட் (dark mode) மற்றும் எப்போதும் டிஸ்பிளே ஆன் ( Always On Display feature) அம்சத்தையும் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் பீட்டா 3 வெர்ஷனில் இருந்து இப்போது நிலையான ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 11 ஐப் பெறுகிறது.

OxygenOS 11 அப்டேட் ( OxygenOS 11 update) பற்றிய தகவல் உங்களுக்கு வரவில்லை என்றால், நீங்கள் கைமுறையாக கூட இதை சரிபார்த்து அப்டேட் செய்யலாம். அதற்காக‌ நீங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-ற்குள் செல்ல வேண்டும், பின்னர் சாப்ட்வேர் அப்டேட்டை சரிபார்க்கலாம். இந்த அப்டேட் chat bubble, ஆப்களுக்கான one-time permissions மற்றும் கஸ்டமைஸ் செய்யப்படக்கூடிய notification போன்ற அம்சங்களைக் கொண்டுவருகிறது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.