வெளியிட்ட தேதி : 28.07.2021
Nokia XR20, C30, 6310
Gadgets

Nokia XR20, C30, 6310 series phones unveiled

ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் ஐந்து இடத்தில் கூட இல்லாத நோக்கியா நிறுவனத்தின் புதிய‌ மாடல்களிலும், தொழில்நுட்பத்திலும் சமீப காலமாக மிக்க‌ கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நோக்கியா நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது.

நோக்கியா எக்ஸ் ஆர் 20, நோக்கியா 6310 , நோக்கியா சி 30 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களில் துல்லியமாய் கேட்கக் கூடிய ஆடியோ வசதியும் இடம்பெற்று இருக்கிறது. நோக்கியா எக்ஸ் ஆர் 20 ஸ்மார்ட்போன் அதிகப்படியான வெப்பத்தைத் தாங்கக் கூடியது என்றும், இது தற்செயலான வீழ்ச்சியை 1.5 மீ (சுமார் ஐந்து அடி) வரை பாதிப்பின்றி ஃபோனை தக்க வைத்துக் கொள்ளும், மேலும் 30 நிமிடங்களுக்கு, ஐந்து அடி ஆழம் வரை நீருக்கடியில் மூழ்கிய பின்னரும் வேலை செய்யும்.கொரில்லா விக்ட்ஸ் திரையுடன் (Corning Gorilla Glass Victus shield) உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் ஆயுளை பரிசோதிக்க பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் ராபர்டோ கார்லோஸ் மற்றும் பெண் உலக சாம்பியன் லிசா சிமோச்சேவும் தொடர் பரிசோதனைகள் மூலம் அதன் தரத்தை உறுதி செய்தனர்.

நோக்கியா எக்ஸ்ஆர் 20 (Nokia XR20), 48 எம்பி மற்றும் 13 எம்பி (48MP( ƒ/1.79, ZEISS Optics) + 13MP 123-degree ultra-wide camera) என இரண்டு கேம‌ராவுடனும் சீஸ் ஒளியியல், ஓசோ இடம் சார்ந்த ஒடியோ மற்றும் புதுமையான இமேஜிங் தீர்வுகளைக் கொண்டுள்ளது. இது இரண்டு உள்ளமைவுகளில் வருகிறது - 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மற்றும் + 128 ஜிபி சேமிப்பு.

மற்றொரு ஸ்மார்ட்போன் சி 30 (Nokia C30), 6.82 இன்ச் அளவில் எச் டி தொடுதிரையுடன் நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி அமைப்பைக் கொண்டு வெளிவருகிறது . இது பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், டிரிபிள் ஸ்லாட்டுகள் - நானோ சிம் 1+ நானோ சிம் 2 + மைக்ரோ எஸ்.டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.