வெளியிட்ட தேதி : 18.03.2021
Nokia G10 Smart Phone
Gadgets

Nokia G10 India price, launch date, all key specifications revealed in massive leak

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்ஃபோன் (Nokia G10 Smart Phone) வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாக‌ தெரியவருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனத்தின் நோக்கியா, புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் முன்னதாகவே பல இணைய‌தளங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் அறிமுகத்துடன் நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஆகிய புதிய ஸ்மார்ட்போன்களையும் எச்எம்டி குளோபல் அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

நோக்கியா ஜி 10 எச்எம்டி குளோபலின் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும். நோக்கியா ஜி 10 இல் எச்எம்டி ஒரு பெரிய டிஸ்பிளே மற்றும் 48 எம்பி குவாட் கேமராக்களைக் கொண்டு வரக்கூடும். நோக்கியா ஜி 10 இன் விலை இந்தியாவில் ரூ .11,999 ஆக‌ இருக்கும் என்றும் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனின் (Nokia G10 Smart Phone) அம்சங்கள் : இது ஜி10 ஆக்டோகோர் செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆகிய அளவுகளில் வரும் எனவும் இது 32 ஜிபி உள்சேமிப்பு அல்லது 64ஜிபி உள்சேமிப்பை கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 உடன் வெளியிடப்படும் எனவும், ஆண்ட்ராய்டு 11 வெளியான பிறகும் அதே பழைய ஓஎஸ் ஆதரவை பெறும் என கூறப்படுகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு 512ஜிபி வரை மெமரி நீடிக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் , எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் உடன் 6.38 இன்ச் டிஸ்ப்ளே, 19:5:9 விகித அளவையும் யூஎஸ்பி டைப் சிபோர்ட் ஆகியவையை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும்.

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 எம்பி மூன்றாம் நிலை மற்றும் 2 எம்பி நான்காம் நிலை கேமராவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நோக்கியா ஜி 10 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.11,999 ஆக இருக்கும் என தெரியவ‌ருகின்றது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.