வெளியிட்ட தேதி : 16.03.2021
Google Pixel 5a Launch India
Gadgets

Google Pixel 5A spotted on BIS certifications, likely to launch in India

பல‌ நாட்களாக‌ முணுமுணுக்கப்பட்ட‌ கூகிளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், கூஃகிள் பிக்சல் 5 ஏ (Google Pixel 5a) இப்போது BIS சான்றிதழைப் (BIS certified) பெற்றுள்ள‌து. இது பரபரப்பான செய்தி, ஏனென்றால் கைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் (Mobile Phone manufacturing Companies) பொதுவாக விற்பனைக்கு முன்பு இந்த BIS சான்றிதழை பெறுகின்றன.

இன்னிலையில், கூகுள் நிறுவனத்தின் பட்ஜெட் இரக பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் தியதியும் தற்போது வெளியாகியுள்ளது. தகவல்களின் படி பிக்சல் பட்ஸ் இயர்போன் ஏப்ரல் மாதத்திலும், புதிய பிக்சல் போன் ஜூன் 11 ஆம் தேதியும் அறிமுகமாகும் என தெரிய‌ வருகிறது.

தற்போதுள்ள பிக்சல் கைபேசிகளைப் போல பிக்சல் 5 ஏ ஒரு ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே டிசைனுடன் செல்ஃபி கேமராவிற்கான சிறிய கட்அவுட்டுடன் வரும்.

கூஃகிள் இன் இப்புதிய ஸ்மார்ட்போன் தோற்றத்தில் பார்ப்பதற்கு பிக்சல் 4ஏ போன்றே காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது. கூஃகிள் பிக்சல் 5a முழு HD + (2220x1080) ரெஸொலூஷன் ( resolution) OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் 5 இல் காணப்படும் அதே 12 மெகாபிக்சல்கள் + 16 மெகாபிக்சல் கேமரா தான் 5a இல் இருக்கக்கூடும் என்ற‌ ஊகங்கள் உள்ளன. கேமராவில் மூன்றாம் கட்ட கண்டறிதல் ஆட்டோ ஃபோகஸ் (Phase Detection Auto Focus (PDAF)) சென்சார் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூஃகிள் பிக்சல் 5 ஏ கைபேசியின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் இருக்கும், மேலும் 5a 3.5 மிமீ ஹெட் ஃபோன் ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவரும் என்றும் யூகங்கள் உள்ளன‌.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.