வெளியிட்ட தேதி : 22.05.2021
apple-foldable-flexible-iPhone
Gadgets

Apple's foldable iPhone rumor: Apple expects to ship 20M folding phones in 2023

ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வண்ணம் புதிய புதிய பொருட்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் காரணமாக உலகளவில் ஆப்பிள் ஐபோன் (Apple Iphone) ரசிகர்களும் அதிகமாக உள்ளனர். இப்போது ஆப்பிள் நிறுவனம் 2023 ஆம் ஆண்டுக்குள் ஒரு ஃபோள்டபிள் ஐ-ஃபோனை அறிமுகம் செய்யக்கூடும் (வதந்தி) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 8 இஞ்ச் ஃப்ளெக்சிபிள் OLED டிஸ்பிளே கொண்டிருக்கும்.

ஃபோள்டபிள் ஐ-ஃபோன் குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் கொடுக்கவில்லை. சாம்சங், ஹவாய், மோட்டோரோலா மற்றும் எல்ஜி நிறுவனங்கள் போன்று, மடிக்கக்கூடிய ஃபோள்டபிள் ஐ-ஃபோன் மாடலை ஆப்பிள் (Apple) கொண்டு வரப்போகிறதா என்பதும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெளிவாகவில்லை.

ஃபோள்டபிள் ஐ-ஃபோனில் 8 அங்குல கியூஎச்டி + டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதன் ரெசல்யூஷன் 1800x3200 பிக்சல்கள் இருக்கும் என்றும் ஊடக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. இது சாம்சங் கேலக்ஸி Z Fold 2 இல் கிடைக்கும் QXGA + திரையை விட அதிக பிக்சல்கள் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும். 2023 ஆம் ஆண்டில் ஆப்பிள் இந்த ஃபோள்டபிள் ஐ-ஃபோனின் 15-20 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோள்டபிள் டிஸ்பிளேவை உருவாக்க சாம்சங் (Samsung) நிறுவனத்துடனும், ஆப்பிள் ஃபோள்டபிள் ஐ-ஃபோனுக்கான ஃப்ளெக்சிபிள் டிஸ்பிளேவை உருவாக்க‌ எல்ஜி உடனும் கூட்டு சேரலாம் என‌ அறிக்கைகள் கூறுகின்றன‌.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.