வெளியிட்ட தேதி : 24.03.2021
whatsapp_web_voice_playback_wabeta_info
Gadgets

WhatsApp working on a voice messages playback speed feature

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியாக‌ புதிய‌ பயனுள்ள அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் வாட்ஸ்அப் செயலியில் உள்ள சில அம்சங்கள் அதன் நிகர்போட்டி செயலிகளாய் (competitive instant messaging apps) இருக்கும் சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு வாய்ஸ் மெசேஜை FAST FORWARD செய்யும் புதிய வசதியை கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நீண்ட ஆடியோ மெசேஜ்களை கேட்பதை எளிதாக்கும் புதிய அம்சத்தை (new voice messages playback speed feature) கொண்டுவர உள்ளது.

வாட்ஸ்அப் தனது புதிய‌ தனியுரிமைக் கொள்கையை அறிவித்த உடனே பல்வேறு மக்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். அதிலும் டெலிகிராம் செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாட்ஸ்அப் ஆடியோ அல்லது வாய்ஸ் மெசேஜை 1.5எக்ஸ் அல்லது 2எக்ஸ் வேகத்தில் பிளே செய்து இயக்க முடியும். மேலும் பயனர்கள் ஸ்டாண்டர்ட் 1 எக்ஸ் வேகத்திலும் ஆடியோ மெசேஜ்களை கேட்டகாலம் என்று கூறப்படுகிற‌து. இந்த அம்சம் 1x, 1.5x மற்றும் 2x ஆகிய மூன்று வேக நிலைகளைக் கொண்டுள்ளது.

மிக மெதுவாகப் பேசும் வழக்கமுடைய‌ நண்பர்கள் அல்லது உறவினர்கள் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜை உங்களுக்கு அனுப்பினால், அந்த மெசேஜை நீங்கள் விரைவாகக் கேட்டு புரிந்துகொள்ள இந்த FAST FORWARD அம்சம் அருமையாக உதவும்.

ஆனால் இந்த புதிய வசதி தற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் ( WhatsApp Beta) இருப்பதாகவும், வாட்ஸ்அப் வெர்ஷன் 2.21.60.11 இந்த அம்சத்துடன் வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் பொது பீட்டா பதிப்பிற்கு எப்போது கிடைக்கும் என்பது குறித்த‌ உறுதியான‌ தகவல்கள் எதுவும் இல்லை. நீங்கள் சமீபத்திய பீட்டாவை நிறுவியிருந்தாலும் (latest beta installed), இவை இன்னும் டெவலப்மென்ட் நிலையில் இருப்பதால் இந்த அம்சங்களை நீங்கள் காண முடியாது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.