வெளியிட்ட தேதி : 07.08.2021

Uttarakhand Bhookamp Alert app: India’s first earthquake early warning system launched.

பூகம்பம் பலவகையான‌ இயற்கை பேரழிவினை ஏற்படுத்தும். இதனால் சுனாமியும், ஏற்பட்டும் பல பேரழிவும், துயரங்களும் கணக்கற்றது. இந்த பூகம்பம் ஏற்பட்ட பிறகு அது குறித்த செய்திகள் அதிக அளவில் வெளிவந்தாலும் அதை முன்கூட்டியே அறிய முடியாத நிலை உள்ளது.

உத்தரகாண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (USDMA) மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-ரூர்கி ஆகியன இணைந்து உத்தரகண்ட் பூகாம்ப் எச்சரிக்கை செயலியை (Uttarakhand Bhookamp Alert app) உருவாக்கியுள்ளது.

உத்தரகாண்ட் பூகாம்ப் எச்சரிக்கை செயலியை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைத்தார். பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற ஒரு செயலியை உருவாக்கிய முதல் மாநிலம் உத்தரகாண்ட் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பூகம்ப எச்சரிக்கையானது நிகழ் நேரத்தில் முன்னரே அறிவித்து எச்சரிக்கை அனுப்புகிறது. நிலநடுக்கம் நிகழப்போகிறது என்பதை சில‌ வினாடிகளுக்கு முன்னரே தெரிவிக்கின்றது. ஐஐடி-ரூர்கியின் கட்டுப்பாட்டு கருவியானது (IIT-Roorkee's control unit) நிகழ்நேரத்தில் சென்சார்களிடமிருந்து சிக்னல்களைப் பெற்று எச்சரிக்கைச் செய்தியை அனுப்புகின்றது.

ஒரு சிறந்த‌ அல்காரிதம், சிக்னல்களை சென்சாரிடமிருந்து பெற்று, அலைகள் எவ்வளவு தூரம் பயணிக்க இயலும், எந்தப் பகுதிகள் தாக்கப்படலாம், முதலியவற்றை பகுப்பாய்வு செய்யும். 5.5 அல்லது அதற்கு மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்படும் என‌ கண்டறியும் போதெல்லாம், கணினி ஒரு எச்சரிக்கையை உருவாக்கி, அதை ஆப் (Uttarakhand Bhookamp Alert app) மூலம் அனுப்பும்,

இந்த செயலி அண்ட்ராய்ட் மற்றும் ஐ ஓ எஸ் (Android & iOS) ஆகிய இரு ஓஎஸ்களில் இயங்கும் ஃபோன்களில் செயல்படக்கூடியது ஆகும். மேலும் இந்த செயலி மூலம் நிலநடுக்கம் ஏற்பட உள்ளதை முன்கூட்டியே தெரிந்து கொள்வதால் மக்கள் தங்களைப் பாதுகாக்க வேறு இடங்களுக்குச் செல்ல வழிவகை செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.