வெளியிட்ட தேதி : 20.03.2021
twitter plays youtube videos
Gadgets

Twitter rolls out In-app YouTube video playback

ட்விட்டர் அதன் மொபைல் செயலியில் (Mobile App) வீடியோக்களை ப்ளே செய்யும். இந்த‌ வீடியோக்கள் அனைத்தும் ட்விட்டர் மேடையில் நேரடியாக பதிவேற்றியவையாக‌ இருக்கும். ஆனால், யாராவது ஒரு யூடியூப் (YouTube) இணைப்பை இடுகையிட்டால், அது உங்களை உலாவி அல்லது YouTube பயன்பாட்டிற்கு திருப்பிவிடும்..

கடந்த சில நாட்களில் சோதனை கட்டத்தில் ட்விட்டர் வெளியிட்டுள்ள பல அம்சங்களில் யூடியூப் வீடியோ பிளேபேக் (In-app YouTube video playback) ஒன்றாகும். கடந்த வாரம், இது 4K புகைப்படங்களை பதிவேற்றும் திறனை அறிமுகப்படுத்தியது மற்றும் உங்கள் டைம்லைனில் முழு படங்களையும் பார்க்க‌ அனுமதிக்கிற‌து என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, ட்விட்டர் ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது, இது செயலியை விட்டு வெளியேறாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க உங்களை அனுமதிக்கும். இன்று முதல், சில iOS பயனர்கள் செயலி விட்டு வெளியேறாமல் நேரடியாக YouTube வீடியோக்களைப் பார்க்க அனுமதிக்கிறது என்று ட்விட்டர் கூறியுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ iOS செயலி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. என்றாலும் விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கும் ட்விட்டர் இந்த‌ அம்சத்தை அனுமதிக்கும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.