வெளியிட்ட தேதி : 17.03.2021
Hacker-Banking App hacker
Gadgets

Alert!! These Android apps can hack into your banking apps

அண்ட்ராய்டு (Android) கைபேசி வைத்திருப்பவர்கள், கவனமாக இருங்கள், ஏனெனில் உங்கள் கைபேசியில் உள்ள சில செயலிகள் (Mobile Apps) மூலம் ஹேக்கர்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம். 8 புதிய ஹேக்கிங் செயலிகளை, இரண்டு புதிய வைரஸ்களின் உதவியுடன், ஹேக்கர்கள் கொண்டு வந்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்த செயலிகளின் உதவியுடன் வங்கிக் கணக்கிலிருந்து (Bank Account) பணத்தை காலி செய்து விடுவார்கள் .

இந்த 8 செயலிகளில் ஏதேனும் ஒன்றை தற்செயலாக‌ நிறுவும்போது, ​​உங்கள் கைபேசி எண் அல்லது மின்னஞ்சலை தர வேண்டும். இந்த தகவல்களின் உதவியுடன், உங்கள் வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஹேக்கர்கள் பெற்றுவிடுகின்றனர். குறித்த‌ தகவல்கள் பெற்ற‌ பின்னர் எந்த வங்கிக் கணக்கையும் ஹேக் செய்வது அவர்களுக்கு எளிதாகிறது. கண் சிமிட்டும் நேரத்தில் உங்கள் கணக்கிலிருந்து பணத்தையும் எடுத்து விடுவார்கள்.

மால்வேர் (Malware) ஒன்றின் உதவியுடன் உங்கள் வங்கிக் கணக்கை ஹேக்கர்கள் காலி செய்து விடுவார்கள். இந்த செயலிகளை நிறுவுவதன் மூலம் (App Installation) உங்கள் கைபேசியில் MRAT நிறுவப்படும். அது நீங்கள் அறியாமலேயே நடக்கும். உங்கள் கைபேசியை வேறு இடத்திலிருந்து அணுக MRAT உதவும். இதனால் ஒரு நபர் உங்களிடமிருந்து வெகு தூரத்தில் இருந்தாலும் உங்கள் கைபேசியைக் கட்டுப்படுத்த முடியும்.


ஹேக்கிங்கைத் தவிர்க்க இந்த செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும்

  • – Cake VPN (com.lazycoder.cakevpns)
  • – Pacific VPN (com.protectvpn.freeapp)
  • – eVPN (com.abcd.evpnfree)
  • – BeatPlayer (com.crrl.beatplayers)
  • – QR/Barcode Scanner MAX (com.bezrukd.qrcodebarcode)
  • – Music Player (com.revosleap.samplemusicplayers)
  • – tooltipnatorlibrary (com.mistergrizzlys.docscanpro)
  • – QRecorder (com.record.callvoicerecorder)

Clast82, AlienBot Banker ப்ரோகிராம் வைரஸ் மூலம் உங்கள் Google Pay, Paytm, PhonePe போன்ற நிதி பரிவர்தனையில் உள்ள அனைத்து முக்கியமான தகவல்களையும் எடுத்து உங்கள் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது. என்வே இந்த‌ 8 ஆப்களையும் இன்ஸ்டால் செய்யாதீர்கள். நிறுவப்பட்டிருந்தால் நீக்கிவிடுங்கள் (Uninstall).

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.