வெளியிட்ட தேதி : 07.11.2021

Use Whatsapp Without Internet! New Feature Links Multiple Devices Without Internet

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் இனிமுதல் மொபைலில் இன்டர்னெட் இல்லாமலும் PC-யுடன் இணைக்கும் புதிய அட்டகாசமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் தங்கள் கணக்குகளை இரண்டாம் நிலை சாதனங்களுடன் (secondary devices) இணைக்க மற்றும் பல மாதங்கள் தங்கள் முதன்மை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தாமல் செய்திகளை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும் அம்சத்தை சோதனை செய்து வருகிறது.

அனைத்து IOS பயனர்களுக்கும், ஒரு டேப்லெட் அல்லது இரண்டாவது ஸ்மார்ட்போனை இணைக்க முடியாது. எனவே உங்களால் இந்த அம்சத்தை அணுக முடியவில்லை என்றால் உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவைத் தட்டவும். "இணைக்கப்பட்ட சாதனங்கள்" என்பதைத் தட்டுவதன் மூலம் நீங்கள் அம்சத்தை இயக்க வேண்டும்.

இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

WhatsApp இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும். இது மொபைல் ஃபோனில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப்பின் வலை பதிப்பினை (WhatsApp Web) திறக்க பயனர்களை அனுமதிக்கும்.
இதன் மூலம் ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் பயனர்கள் வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்து நபர்களுடனும் / தொடர்புகளுடனும் கணினி மூலம் இணைந்திருக்க முடியும்.

என்றாலும், இவ்வ‌ம்சத்தை இயக்க, பயனர்கள் டெஸ்க்டாப் பதிப்பில் 'பீட்டா' நிரலைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்காக பயனர்கள் Settings கில் ஆழமாக நோண்ட வேண்டியதில்லை. உங்கள் கணினியின் பிரவுஸரில் (browser) WhatsApp Web-ஐ திறக்கவும், அது கைபேசியில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்படி கேட்கும், அதேசமயம் கணினி browser-ல் ஒரு ஆப்ஷன் பீட்டா திட்டத்தில் சேருவதற்கான அழைப்பை ஏற்கும்படி கேட்கும்.

இந்த‌ ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதால், ​​உங்கள் ஃப்ரொபைல் படத்திற்கு அருகில் மேல் இடது மூலையில் 'பீட்டா'வைக் காண்பீர்கள். பின்னர், கைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் மெசேஜ் உடன் பிறரை தொடர்பு கொள்ள முடியும்.

எச்சரிக்கை ஒன்றும் உள்ளது, நீங்கள் ஒரு நபருக்கு பிழையாக‌ செய்தியை அனுப்பினால், அதை நீக்க விரும்பினால், உங்களால் அதை பிரவுஸரில் (browser) அழிக்க முடியாது. எனவே, அந்த‌ தேவையற்ற‌ மெசேஜை நீக்க உங்கள் கைபேசியில் உங்கள் WhatsApp-க்குச் செல்ல வேண்டும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.