Lalithambigai Songs
Lalithambigai Songs : Goddess Lalithambigai Ashtotram, Namavali, Stotrams in Tamil. Sri Lalithambigai Charanam 1000 Namangal Songs, மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே, ஸ்ரீ லலிதாம்பிகை 1000 நாமங்கள்.
ஸ்ரீ லலிதாம்பிகை பக்தி பாடல்கள்
பார்வதியின் அம்சமான ஸ்ரீ லலிதாம்பிகை தேவியை போற்றும் பாடல்கள், ஸ்லோகங்கள், மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். செல்வ சேர்க்கை மற்றும் புகழ் உண்டாகும்.
லலிதாம்பிகை வழிபாடு
அன்பையும் அருளையும் தருவாள் லலிதாம்பிகை; கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய மந்திரம்; எளிய வழிபாடு! லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள்.
'ஓம் லலிதாம்பிகாய நமஹ’
இந்த ஒற்றை வரி மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள். அதேபோல், வீட்டில் விளக்கேற்றுங்கள். கோயிலில் அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வேண்டிக் கொள்ளுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.
லலிதாம்பிகையை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன.?
மகிஷாசூர மர்த்தினி ஸ்லோகங்கள் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் என அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப ஸ்துதிகளை மேற்கொள்வர். இதில் மிக விசேஷமாக போற்றப்படும் ‘லலிதா சகஸ்ரநாமம்’ என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையாகும். இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்க, நன்மைகளைப்பெற வேண்டும் வழிபாட்டு முறையாக பின் பற்றப்படுகின்றது. பக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ‘ஸ்ரீ வித்யா’ எனப்படும். ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும். உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும்.
சக்தி வழிபாட்டினை ‘ஸ்ரீ’ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா. பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தையும் ஒன்றே. லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக்கொள்கின்றன. மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.