தாமரைப்பூவில் அமர்ந்தவளே - லக்ஷ்மி தேவி (அலைமகள்) பாடல் வரிகள். Thamarai Poovil Amarnthavale - Raksha Raksha Jagan Matha Lakshmi Devi song (Amman Songs) by P Suseela- Tamil Lyrics
தாமரைப்பூவில் அமர்ந்தவளே பாடல் வரிகள்
தாமரைப்பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே… செந் (தாமரை)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பாதம் எந்நாளும் தஞ்சமே திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே.. செந் (தாமரை)
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (தாமரை)
உங்கள் கருத்து : comment