குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி பாடல் வரிகள் - ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Kuzhaloothi Manamellam kollai konda Pinnum kuraiyethum enakkethadi Song Lyrics by Othukadu Venkata subbaiyer.
பல்லவி
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி ( தோழி/சகியே)
அனுபல்லவி
அழகான மயிலாடவும் (மிக)
காற்றில் அசைந்தாடும் கொடி போலவும்
மத்யம கால சாஹித்யம்
அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே
தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிதி (/தகுமிகு) என ஒரு பதம் பாட
தகிட ததிமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ
என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு
சரணம்
மகர குண்டலம் ஆடவும் (கண்ணன்)
அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழில் ஆகவும்
காற்றில் மிளிரும் கொடி போலவும் (/துகில் ஆடவும் )
(அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே…)
உங்கள் கருத்து : comment