அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே (உன்) ஆனந்த மோகன வேணுகானம் அதில் (அலைபாயுதே) பாடல் வரிகள் - ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Alai Payuthey Kanna En Manam Miga Alai Payuthey
Un Anandha Mohana Venuganam Athil Song Lyrics by Othukadu Venkata subbaiyer.
அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே
(உன்) ஆனந்த மோகன வேணுகானம் அதில் (அலைபாயுதே)
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா
என் மனம் (அலைபாயுதே)
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக்-அளித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ?
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள்
போலவே மனது வேதனை மிகவொடு (அலைபாயுதே)
உங்கள் கருத்து : comment