வெளியிட்ட தேதி : 13.02.2021
Realme TWS earbuds
Gears

New Realme truly wireless earbuds with ANC support may launch soon

புதிய ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸை (Realme wireless earbuds) ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

ரியல்மே பட்ஸ் ஏர் புரோவின் (Realme Buds Air Pro) விலை இந்தியாவில் ரூ .4,999.

இதனை ரியல்மி நிறுவனம் பாப் இசை கலைஞர்களான தி செயின்ஸ்மோக்கர்ஸ் (The Chainsmokers) உடன் இணைந்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் "Noise off, Realme on” என்ற‌ வாசகத்துடன் கூடிய‌ இசைக் கலைஞர்கள் இடம்பெற்று இருக்கும் விளம்பர படமும் வெளியாகி உள்ளது.

இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (active noise cancellation (ANC) support) வசதியை கொண்டிருக்கும் என்பதை தெரியப்படுத்துகிறது.

மேலும் இந்த புதிய இயர்பட்ஸ் ரியல்மி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ (Realme Buds Air Pro) மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. புதிய ரியல்மே டி.டபிள்யூ.எஸ் இயர்பட்ஸ் (Realme TWS earbuds) இந்தியாவில் அறிமுகம் குறித்த‌ எந்த தகவலும் இல்லை.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.