Garbarakshambigai Amman Mantras

Garbaratchambigai Amman Mantras (Garba rakshambigai) : ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம் - சுக பிரசவமாக இருக்க‌ வேண்டும் என்று தினமும் சொல்லவேண்டிய மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள். கரு காக்கும், சிசு ஆரோக்கியம் மற்றும் நல்ல‌ வளர்ச்சிக்காக‌ நீங்கள் ஜபிக்க‌ வேண்டிய‌ திருக்கருகாவூர் கர்ப்ப ரக்ஷாம்பிகை மந்திரங்கள், போற்றிகள் மற்றும் பாடல் வரிகள்.

கர்ப்பரட்சாம்பிகை கோவில் தல‌ வரலாறு

கர்ப்பிணி பெண்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் வரலாறு

முல்லைவனமாக இந்த கோவில் தலத்தில் இரண்டு பேர் வாழ்ந்து வந்தனர். நித்துருவர், வேதிகை என்ற இரு தம்பதியர்கள் வாழ்ந்தனர். குழந்தை பேரு இல்லாத இவர்கள் முல்லைவனத்து நாதரையும், அம்மனையும் கும்பிட்டு வந்தனர்.

இதனை அடுத்து வேதிகை கருவுற்றாள், ஒரு நாள் நித்துருவர் வெளியில் சென்றிருக்கும் நேரத்தில் வேதிகை மிகவும் கர்ப்பத்தில் அவதிப்பட்டாள். அந்த நிலையில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் பிச்சை கேட்டு வந்தார். வேதிகை மயக்க நிலையில் இருந்ததால் பிச்சை கேட்டு வந்தவருக்கு உணவு கொடுக்க இயலவில்லை.

அவள் அவதி நிலையில் இருப்பதை அறியாத இந்த முனிவர் கோபம் கொண்டு சாபமிட்டார். சாபத்தால் கருவில் உள்ள குழந்தை கலைந்தது. வேதிகை மனமுருகி வழிபட, அம்மன் நேரில் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரை காப்பாற்றி கொடுத்தாள்.

இந்த தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி கர்ப்பிணி பெண்களை காக்கும்படி வேதிகை வேண்டினாள். இதனடிப்படையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு(Garbarakshambigai Temple History) கூறப்படுகிறது.

கர்ப்பரட்சாம்பிகை – குழந்தை செல்வம், கரு காக்கும் தெய்வம்

திருமணம் ஆன தம்பதிகளுக்கு எவ்ளோ செல்வம் வந்து போனாலும் குழந்தை இல்லையென்றால் வெறும் வாழ்க்கையாய் போய்விடும். இந்தத் திருக்கோவில்(Garbarakshambigai Temple) அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள்.

இந்த திருக்கோவிலுக்கு குழந்தை பேறு வேண்டியும், சுகப்பிரசவம் ஆக தமிழகத்தில் மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் வருகிறார்கள். திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் நேரடியாகவே கோவிலுக்கு(Garbarakshambigai Temple History) வந்து நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள்.

Goddess Garbharakshambika (an incarnation of Goddess Parvati) and is known as the protector of the womb. Get the blessing of Goddess Garbarakshambigai and Shri Mullaivananathar.