வெளியிட்ட தேதி : 31.07.2021

Realme Pad Allegedly Spotted on IMDA Certification Site, Camera Specifications Leaked

மெலிதான தோற்றம் மற்றும் கூர்மையான விளிம்புகள் கொண்ட ஐபேட் ப்ரோவைப் (iPad Pro) போன்ற ஒரு வடிவமைப்பை ரியல்மே பேட் கொண்டுள்ளதாக‌ வதந்தி செய்திகள் குறிப்பிடுகின்ற‌ன‌. இதற்கிடையில், அதன் கேமரா விவரக்குறிப்புகள் பற்றிய முக்கிய தகவல்களும் டிப்ஸ்டர் மூலம் கசிந்துள்ளது.

Realme Pad-ன் அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு முன்னதாகவே, அதன் கேமரா மற்றும் பேட்டரி விவரக்குறிப்புகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. ரியல்மி (Realme), அதன் முதல் Tablet-ஐ ரியல்மி பேட்(Realme Pad) என்ற பெயரில் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், Realme Pad, ஆப்பிள் நிறுவனத்தின் iPad-க்கு போட்டியாக மிக குறைந்த விலையில் இந்தியாவில் பல புதிய அம்சங்களுடன் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி மாக்டார்ட் தொழில்நுட்பம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. MagDart தொழில்நுட்ப அறிமுகத்தின்போது Realme Flash ஸ்மார்ட்போனும் அறிவிக்கப்படலாம். ரியல்மே மாக்டார்ட் என்பது ஆப்பிள் மாக்ஸேஃப் போன்றது, இது ஆண்ட்ராய்டுக்கு காந்த சார்ஜிங்கைக் கொண்டுவருகிறது.

அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு முன்னதாகவே, Realme Pad-ன் சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, Realme Pad முன் மற்றும் பின் பக்கங்களில் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளதால் வீடியோ கால் பேச,மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, இரண்டு கேமராக்களும் 3,264x2,448 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட படங்களைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், அதன் அதிக நேர பயன்பாட்டிற்காக அதில் 7000mah பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.