வெளியிட்ட தேதி : 19.03.2021
vehicle-scrapping
Automobiles

Vehicle scrapping policy to offer about 5% rebate on new cars: Nitin Gadkari

பல ஆண்டுகளின் எதிர்பார்புடன், ஆட்டோமொபைல் துறையினரின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்த வாகன அழிப்பு திட்டம், 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த‌ அறிக்கை ஆட்டோமொபைல் துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது எனலாம். இதனால் வாகன விற்பனை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், புதிய வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தன்னார்வ வாகன அழிப்பு திட்டத்தின் படி, தனி நபர் வாகனங்களுக்கு 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் ஸ்கிராப்பிங் செய்யும் திட்டம் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்ப‌டுகிறது.

இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகன விற்பனையை ஊக்குவிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பழைய வாகனங்களை கொடுத்து, புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியை வழங்கலாம் என கூறியுள்ளார்.

பசுமை வரி

மேலும் 8 வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் விதிக்கப்படலாம்.

இதனால் புதிய வாகனங்களின் தேவை அதிகரிக்கும், சுற்று சூழல் பாதிப்பும் இதனால் குறையும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். என்றும் எதிர்பார்க்கப்படுகிற‌து.

வாகனத்துறையின் வருவாய் பெருகும் : தற்போது வாகன துறையின் வருவாய் 4.5 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, வாகன அழிப்பு (vehicle-scrapping) திட்டமானது இதனை 30 சதவீதம் அதிகரித்து, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என‌ எதிர்பார்க்கப்படுகிற‌து. 1.45 லட்சம் கோடியாக இருக்கும் உதிரி பாகங்கள் ஏற்றுமதி, 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.