வெளியிட்ட தேதி : 02.02.2021
20-million-year-old fossilised tree
சுற்றுச்சூழல்

20-million-year-old fossilized tree discovered by scientists in Greece

பல‌ மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய‌ பழங்கால காடு அருகே சாலைப்பணியின் போது இந்த மரம் கண்டுபிடிக்கப்பட்டது. கிரீஸ் நாட்டின் எரிமலை தீவான லெஸ்போஸில் கிட்டத்தட்ட 20 மில்லியன் ஆண்டு பழமையான மரப்படிமம் கிடைத்திருப்பது உலகளவில் இதுவே முதல் முறை என்று கூறப்பட்டுள்ளது. இந்த மரப்படிமம் பற்றிய சில எதிர்பார்த்திடாத சுவாரசிய தகவல்களும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கியதிலிருந்து கிளைகள் மற்றும் வேர்கள் நிறைந்த ஒரு நல்ல மரத்தில் இது காணப்படுவது இதுவே முதல் முறை என்று லெஸ்போஸின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பேராசிரியர் நிகோஸ் ஜூரோஸ் (Museum of Natural History) கூறினார்.

20 மில்லியன் ஆண்டு பழைமையான மரம் என்று கண்டுபிடிக்கப்பட்ட மரப்படிமத்தில் இரண்டு முக்கிய பாகங்கள் இன்னும் சேதமடையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மரம் இறுக்கமாகி கல்லாகிப் போன பழங்காலத்து மரம் என்று கூறப்பட்டுள்ளது. 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் கிடைப்பது என்பது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை.

15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பள‌வில், யுனெஸ்கோ பாதுகாக்கப்பட்ட தளமான லெஸ்போஸின் பெட்ரிஃபைட் காடு, 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்ததன் விளைவாகும். இதில் பிரமிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இதன் கிளைகள், அடித்தண்டு பகுதியும் எந்த சேதமும் இல்லாமல் இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட மரப்படிமத்திலிருந்து மரத்தின் வயது, இது எந்த மரத்தின் வகையைச் சேர்ந்தது என‌ உறுதிப்படுத்தும் வேலைகளை விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.