வெளியிட்ட தேதி : 24.03.2021
Electoral Photo Identity Card
Lifestyle

How To Download e-EPIC / Digital Voter ID Card for Mobile Phone?

நடைபெறவிருக்கும் அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய‌ ஐந்து மாநிலங்களில் உள்ள‌ வாக்களர்கள் இந்த புதிய டிஜிட்டல் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் வாக்காளர்கள் அடையாள அட்டையைப் பெறலாம்.

e-EPIC: இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் திட்ட‌மான இ-இபிஐசி (மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

சரியான‌ EPIC எண்ணைக் கொண்ட அனைத்து பொது வாக்காளர்களும் e-EPIC க்கு தகுதியுடையவர்கள். அதிக தேவையைப் கருத்தில்கொண்டு, புதிதாக பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது, எனவே எஸ்எஸ்ஆர் 2021 இன் போது புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கான இ-இபிஐசி பதிவிறக்கம் 2021 பிப்ரவரி இறுதி வரை தொடரும். மற்ற வாக்காளர்கள் ஆணைய‌ அறிவிப்புக்காக காத்திருக்க‌ வேண்டும்.

மின்-இபிஐசி (Electronic Electoral Photo Identity Card) என்றால் என்ன?

மின்-இபிஐசி என்பது தேர்தல் புகைப்பட அடையாள அட்டையின் எலக்ட்ரானிக் பதிப்பு மற்றும் பாதுகாப்பான போர்ட்டபிள் ஆவண வடிவமைப்பு (PDF) பதிப்பாகும். இது மொபைல் ஃபோன் அல்லது கணினி மூலம் பதிவிறக்கம் செய்யப்படலாம். இப்படியாக‌ வாக்காளர் தனது வாக்காளர் அடையாள‌ அட்டையை மொபைலில் சேமித்து வைக்கலாம்,. அதை டிஜி லாக்கரில் (DigiLocker) PDF ஆக பதிவேற்றலாம் அல்லது அதை நகல் எடுத்து லேமினேட் செய்து வைத்துக்கொள்ளலாம்.

இ-இபிஐசி (e-elector photo identity card) / எலக்ட்ரானிக் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

வாக்காளர் போர்ட்டல் அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் செயலி அல்லது என்விஎஸ்பி (NVSP) ஆகிய வழிகளில் இ-இபிஐசி (e-EPIC) பதிவிறக்கம் செய்யலாம்.

இ-இபிஐசி பதிவிறக்கம் செய்வதற்கான வழிகள்

கீழேயுள்ள வழிகளை பயன்படுத்தி http://voterportal.eci.gov.in அல்லது https://nvsp.in/ அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் பயன்பாட்டிலிருந்து இ-இபிஐசியை பதிவிறக்கம் செய்யலாம்:

கைபேசியில் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது ?

  • வாக்காளர் போர்ட்டலில் (Voter Portal) http://voterportal.eci.gov.in கணக்கினைத் துவங்கி உள்நுழையவும் (Login செய்யவும்).
  • அந்த பக்கத்தில் இருக்கும் e-EPIC Download என்பதைக் கிளிக் செய்க.
  • EPIC எண் அல்லது படிவ குறிப்பு எண்ணை டைப் செய்யவும் (உள்ளிடவும்).
  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP அனுப்பப்படும். அதை உள்ளீடவும். (மொபைல் எண் Eroll இல் பதிவு செய்யப்பட்டிருந்தால்)
  • இப்போது e-EPIC Download (பதிவிறக்கத்திற்கான‌ லிங்கை) கிளிக் செய்க
  • Eroll தளத்தில் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், KYC நிரப்புதலுக்கான‌ பக்கத்திற்குச் சென்று நிரப்ப வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.