வெளியிட்ட தேதி : 11.02.2021
Zoom Court With Face Filter On - A cat face
Software

Lawyer Shows Up In Zoom Court With Face Filter On And Has To Assure Judge He’s 'Not A Cat'

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவருடமாக‌ அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன‌. கொரோனா காலகட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள், அலுவலக அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான சந்திப்புகள் அனைத்து ஆன்லைன் வீடியோ கால் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் வீடியோ காலிங் வசதி நமது பல்வேறு வேலைகளை எளிமையாய் முடித்துக்கொள்ள‌ உதவுகிறது. என்றாலும் வீடியோ கால் சந்திப்புகளில் ஏதேச்சையாக‌ நிகழும் தவறுகளும், வாடிக்கையான சம்பவங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி விடுகிறது.

முக்கியமான நினைவூட்டல் : எப்போதும் , வீடியோ காலிங் செய்வதற்கு முன்பு செட்டிங்க்ஸ் ஐ சரிபார்க்கவும்.
டெக்சாஸின் 394 வது மாவட்ட நீதிமன்றத்தின் ஒரு வழக்கை முன்வைக்கவிருந்த ராட் பொன்டன் என்ற வழக்கறிஞர் சமீபத்தில் இந்த பாடத்தைக் கற்றுக்கொண்டார்.

வழக்கறிஞர், அதனை மாற்ற முயன்றும் அவரால் முடியவில்லை. அப்போது அந்த அழைப்பின் மறுபக்கம் இருந்த நீதிபதி "நீங்கள் பேசுவது கேட்கிறது, ஏதோ ஃபில்டர் இயக்கத்தில் இருக்கிறது" என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் பேசிய வழக்கறிஞர் இந்த ஃபில்டர்-ஐ எப்படி மாற்றுவது என எனக்கு தெரியவல்லை. எனது உதவியாளர் உதவியுடன் இதை மாற்ற முயற்சிக்கிறேன் என்றார். 'நான் பூனையில்லை' எனவும் கூறியுள்ளார்.

அப்படியான‌ ஒரு வேடிக்கை‌ சம்பவ வீடியோ தற்போது நடைபெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க வழக்கறிஞரான ரோட் போண்டோன் என்பவ‌ர், ஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், தனது உதவியாளரின் கணினி மூலம் பங்கு கொண்டுள்ளார். அச்சமயம் அவர் வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும் போது மென்பொருளில் உள்ள‌ ஃபில்டர் ஆன் ஆகியுள்ளது.

பின்னர், இச்சம்பவம் குறித்து பேசிய ரோட் கூறியது : எனது உதவியாளரின் தவறுதலால் அந்த‌ நிகழ்வு நடந்தது. உதவியாளர் அவர‌து கணினியில் பூனை ஃபில்டரை ஆன் செய்து வைத்திருந்தார் என்றும். சில நிமிடங்களுக்கு பின் அதனை மாற்றி என் முகத்தை சரி செய்து கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.வழக்கறிஞரின் இந்த வாடிக்கையான வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக வைரலாக பரவி வருகிறது. அதிலும் பூனை பேசுவது போல் இருப்பதால் இந்த வீடியோவிற்கு அதிக லைக்குகளும் வந்த வண்ணம் உள்ளன.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.